Thursday, May 23, 2024

உலக ஆமைகள் தினம்

 *இன்றைய நாள்.*

(23-மே)

**

🐢 உலக ஆமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

🐢 அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள் உயிரிழப்பதைத் தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

*சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்.*


💉 வளரும் நாடுகளில்

சுமார் 2 முதல் 3.5 மில்லியன் வரை இந்நோயுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இந்நோயினால் பாதிப்படைகின்றனர்.


💉 ஆகவே, இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003ஆம் ஆண்டு பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 


💉 அதனால் ஐ.நா.சபையும் மே 23ஆம் தேதியை மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.



*முக்கிய நிகழ்வுகள்..*


🎼 1981ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தமிழ் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி மறைந்தார்.


🎬 1906ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் மறைந்தார்.

No comments:

Post a Comment