Wednesday, May 29, 2024

செய்தித் துளிகள் - 29/05/2024 (புதன் கிழமை)

பழைய பஸ் பாஸ் காண்பித்து பள்ளி மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தகவல்.

RTE கட்டாய கல்விக்கு அதிகமானோர் விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு.

📕📘உயர் கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு.

📕📘பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்புக்கான செயல்திட்டம்: தமிழக அரசுக்கு கல்வி அமைப்பு வேண்டுகோள்

📕📘புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் முழுமையாக அமல்: சீருடையில் மாற்றமில்லை.

📕📘துணை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரம் பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.

📕📘பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலை நேற்று

முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

📕📘ஜூன் 9 அன்று நடைபெறுகின்ற TNPSC GROUP - 4 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு.

📕📘பொதுத் தேர்வு மையங்களில் மீதமுள்ள எழுது பொருட்களின் விவரம் ஒப்படைக்க அறிவுறுத்தல்.

📕📘கேரளாவில், ஒரே ஹோட்டலில் உணவருந்தி, உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது

திருச்சூர் மாவட்டம்  மூணுபீடிகையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டது

இதுகுறித்து, ஆய்வு நடத்திய அதிகாரிகள் ஹோட்டலில் பரிமாறப்பட்ட மயோனைஸே, இதற்கு காரணம் என கண்டறிந்தனர்

இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது

இதனிடையே திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

📕📘டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜூன்.1ம் தேதி காலை 7மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

📕📘பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்

சாத்தியமான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது 

-பிரதமர் மோடி

📕📘தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.160 உயர்ந்து ரூ.53,920-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740-க்கு விற்பனை

📕📘பழனியில் ஆகஸ்ட் 24,25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளதாக அறநிலையத்துறை அறிவிப்பு.

மாநாட்டில் பங்கேற்கவும், நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்க விரும்புவோர் ‘muthamizhmuruganmaanadu2024.com’ என்ற தனி இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📕📘சிக்கிம் உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதி

மருத்துவ அதிகாரியின் பரிந்துரையைப் பெற்று மாதம் 2-3 நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு

📕📘ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தகவல்

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில்,துவரம் பருப்புக்கான ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்து கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

📕📘மருத்துவமனை சூப்பிரண்டு, ஆர்எம்ஓவிற்கு மேமோ

ஈரோடு அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாமல் நோயாளியை அவரது மகள் தூக்கிச் சென்ற விவகாரம்:

மருத்துவமனை சூப்பிரண்டு, ஆர்எம்ஓவிற்கு மெமோ;

நாளை விசாரணை :

மருத்துவமனை சுகாதார இணை இயக்குநர் அம்பிகா இருவரும் கொடுத்த வாய்மொழி விளக்கத்தை சுகாதார இணை இயக்குநர் அம்பிகா, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல்

📕📘ஆரஞ்ச் தொப்பி பெருமைதான்…ஆனால் அதைவிட வெற்றி முக்கியம்: விராட் கோஹ்லி நெகிழ்ச்சி

📕📘கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

📕📘இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து

📕📘கிறிஸ்தவ தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

📕📘கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

📕📘இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.                                                                           📕📘வைகோ உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

📕📘ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு

📕📘கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

📕📘மருத்துவ காப்பீடு துறைக்கு வரும் LIC?

மத்தியில் புதிதாக பதவியேற்கவுள்ள அரசு, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை ஒரே நிறுவனம் வழங்குவதற்கு அனுமதி தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை வைத்து, ஆயுள் காப்பீடு மட்டும் தற்போது வழங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான LIC, மருத்துவ காப்பீடு துறைக்கு வர திட்டமிட்டு வருவதாகவும், இத்துறையில் உள்ள ஏதேனும் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்த வாய்ப்புள்ளதா என ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment