Tuesday, May 21, 2024

கோடைக்கேற்ற ஆரோக்கியமான சாலட்..!!

சாலட்கள் எளிதில் செரிக்கக்கூடிய உணவு. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது.
கோடை வெப்பத்தை சமாளிக்க நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு ஜூஸ் அல்லது சாலட் செய்து சாப்பிடுவதே சிறந்தது.
*தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், நுங்கு,வெள்ளரி,கம்பு போன்றவை உடலிற்கு ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்தையும் கொடுக்கும்.
அந்த வகையில் ஆரோக்கியம் நிறைந்த இந்த பழங்களைக் கொண்டு சாலட் செய்யும் முறை:
தர்பூசணி சாலட் :
தர்பூசணி, பைன் நட்ஸ், புதினா மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து இந்த சாலட்டை தயாரிக்கலாம். இவற்றில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் கிடைக்கும்.
முலாம்பழம் மற்றும் பப்பாளி சாலட் :
கோடை வெப்பத்தை தணிக்க உதவும் இந்த சாலட்டில் முலாம்பழம், பப்பாளி, வெங்காயம் மற்றும் தக்காளி போன்றவற்றை சேர்க்கலாம்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இந்த சாலட்டை சாப்பிடலாம்.
மாதுளை மற்றும் கிவி சாலட் :
எல்லா பருவக்காலத்திற்கும் உகந்தது மாதுளை. சிறுநீர் தாரை தொற்றை சரிசெய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. கிவியில் வைட்டமின் C, E, K மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது.
மாதுளை மற்றும் கிவி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட்டுடன் ஆரஞ்சு மற்றும் புதினா சேர்த்து கொண்டால் உடலுக்கு வைட்டமின் C அதிகமாக கிடைக்கும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
மாம்பழ சாலட் :
இதை மாம்பழம், மொஸரெல்லா சீஸ், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, பால்சாமிக் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தயாரிக்கலாம். இந்த கலர்ஃபுல் சாலட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
நாவல் பழம் சாலட் :
வெள்ளரி, மாம்பழம், எலுமிச்சை சாறு சேர்த்து ஆலிவ் எண்ணெயை கலந்து இந்த சாலட்டை சாப்பிடலாம்.

No comments:

Post a Comment