Tuesday, May 21, 2024

உடலில் உப்பு அதிகமா?

உடலில் உப்பு அதிகமானால் அதை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்களும், வேர்வை சுரப்பிகளும் செய்யும், சிறுநீரகங்கள் ஹைட்ரஜன்,, யூரியா, கிரியேன்டனின் போன்ற உப்புகளை இரத்தித்தில் இருந்து பிரித்து வெளியேற்றும், நாம் மிகுதியாக உண்பது உப்பு சேர்த்த உணவு வகைகளைத்தான், மூன்று வேளையும் சமைத்த உணவுவகைளையே சாப்பிடும்போது உடலில் புளிப்புத் தன்மையும், உப்பும் அதிகமாகி விடுகிறது, இதனால் இரைப்பையிலும் குடலிலும் அமிலத்தன்மை உருவாகிவிடும், அப்புறம் கொலஸ்டிரால் அதிகரிக்கும், உடல் கட்டமைப்பு சிதைவுறும், சிறுநீரகங்கள் பலவீனப்படும், சிறுநீரகத்தில் கிருமித்தொற்று ஏற்படும்,
நம் உடலில் 30மிலி க்கு மேல் யூரியா என்னும் உப்பு சத்து அதிகமாக இருந்தால் சிறுநீரகம் செயல்படுவதில் சிரமம் ஏற்படும், இரத்தத்தில் உப்பு அதிகமாக இருந்தால் இருதயம் இயங்குவதிலும் சிரமம் ஏற்படும், இதை நீக்க ரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகள் முழுமையான பலனை தராது, நிரந்தர தீர்வையும் தராது,இவர்களுக்கு உணவே மருந்து,
சமைக்காத பச்சைக் காய்கறி, கீரைவகைகள், மூலிகை சாறுகள், இளநீர் வாழைத்தண்டு சாறு, முள்ளங்கி சாறு, வெள்ளரி, தர்பூசணி சாத்துகுடி, ,பழச்சாறுகள் இவைகளை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்,
அருகம் புல்சாறு
கீழாநெல்லிச்சாறு
கொத்தபல்லிச்சாறு,
சோற்றுக்கற்றாழை சாறு,
கரிசாலை ,நீராரை,சதாவரி, அமுக்கரா, பொடுதலை, வல்லாரை, ஆவாரம்பூ இவைகளை உணவாக பயன்படுத்த வேண்டும்,
பார்லியை வறுத்து உடைத்து கஞ்சிகாய்ச்சி தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடலாம், கோதுமை கஞ்சி அரிசி நோய் கஞ்சி, சாப்பிடலாம், நன்னாரி, சீந்தில் கொடி இவைகளும் பெருமளவு உப்பு நீரை குறைக்கும், ,இந்த நோயாளிகள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், சிறுநீர் நன்க சரியாக வெளியேறு கிறதா என்பதை கவனிக்க வேண்டும், அடிவயிற்றில் ஈரதுணியை போடுதல், மண்பட்டி போடுதல், நீர் ஆகாரவகைகள் மட்டும் சில நாட்களுக்கு உணவாக உட்கொண்டு வருதல் இவற்றின் மூலம் சிறுநீரகத்தை நன்கு செயல்பட தூண்ட முடியும், மேலும் வாழை இலைக் குளியல் சிகிச்சையில் வியர்வை துவாரங்கள் வழியாக வியர்வையானது மிக அதிகமாக உடலைவிட்டு வெளியேறும், யோகா பண்ணலாம், காலை மாலை குளிர்ந்த நீரில் குளிக்கவும் இயற்க்கை உணவு, இவைகளால் யூரியா உப்பை குறைத்து குணப்படலாம், பொதுவாக உணவு சரியான நேரத்தில் சாப்பிடதாத து, மாமிச கொழுப்புகள், உப்பு புளி, மசாலா அதிகமாக உண்ணுதல், அதிகமாக உண்ணுதல் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுதல், டீ காபி மது ரசாயன கலவை ஊட்டப்பட்ட குளிர்பானங்கள் இவற்றை தவிர்க்க வேண்டும், இயற்க்கை வாழ்வியலின் மூலம் உப்பு நீர் தொந்தரவிலிருந்து விடுபடலாம்

No comments:

Post a Comment