Wednesday, May 29, 2024

வாயுகோளாறு நீங்க:

தே.பொருட்கள்..

பெருங்காயம் – 50 கிராம்

வெள்ளைப்பூண்டு – 50 கிராம்

கடுகு – 50 கிராம்

மிளகு - 50 கிராம்

திப்பிலி - 50 கிராம்

ஓமம் - 50 கிராம்

சீரகம் - 50 கிராம்

அதிமதுரம் - 50 கிராம்

கோஷ்டம் - 50 கிராம்

நெய் – 200 கிராம்


     பெருங்காயத்தை எடுத்துக்கொண்டு ஒரு துணியில் முடிந்து இதனை ஒரு பானையில் போட்டு நான்கு லிட்டர் த

ண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து அரை லிட்டர் வரும்வரை காய்ச்சி இதனை வடிகட்டி ஒரு சட்டியில் ஊற்றி தேவையான அளவு சீனியைப் போட்டுப் பாகு போல் காய்ச்சி மேல் குறிக்கப்பட்டிருக்கும் கடைச் சரக்குகளை தூள் செய்து கொண்டு இந்தச் சூரணத்தை மேற்படி பாகு சட்டியில் போட்டுக் கிண்டி மெழுகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறிய பிறகு நெய்யை ஊற்றிப் பிசைந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.


            தினம் இரவு உணவுக்குப்பின் 24 நாட்கள் 2 ஸ்பூன் சாப்பிட

     அனைத்து வாய்வு சம்பந்தப்பட்ட வியாதிகளும் தீரும்.


பத்தியம்:

     வாய்வு உணவு வகைகளை நீக்கவும். மிளகுரசம், அரைக்கீரை, பால், நெய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்

No comments:

Post a Comment