Tuesday, May 28, 2024

கசகசா மருத்துவ குணம்

*"*

நம் நாட்டில் கசகசாவைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனாலும் இது எப்படிக் கிடைக்கிறது? இதன் வளர்ச்சி எப்படி என்பது அநேகருக்குத் தெரியாது. உலகிலேயே மிகவும் போதை தரும் மூலிகை இனங்களில் ஒன்று இந்த கசகசா செடியாகும்.


கசகசா என்பது சிறுமணல் போன்ற விதைகள். இந்த சிறு விதைகளைக் கொண்ட ஒரு காய் உண்டு . இதற்குத்தான் போஸ்தக்காய் என்று பெயர் சிறிய எலுமிச்சங்காய் அளவு காய்க்கும். இந்தக் குத்துச்செடிக்கு போஸ்தக்காய்ச் செடி என்பது பெயராகும்.


போஸ்தக்காய் முற்றியபின் உடைத்தால் கசகசா வெள்ளை நிறமாக, மணல் போல் கிடைக்கும். இந்த கசகசா நம் உணவுப் பொருள்களில் சேர்க்கும் பொருளாதலால் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


கசகசாவிற்கு உடலுரமாக்கும் சக்தியும், துவர்ப்பிச் செய்கையும், உடல் அழற்சியை எல்லாம் போக்கி, குளிர்ச்சி தந்து சுக்கிலத்தைப் பெருக்கும் குணமிருப்பதால் கசகசாவையும், தேங்காய்ப்பாலையும் சேர்த்து பலகார, காய்கறிகளில் கலந்து உணவாகக் கொள்வது நமது நாட்டின் வழக்கம்,


கசகசாவை 50 கிராம் புது மண்சட்டியில் தண்ணீருடன் ஊற வைத்து தண்ணீரை இறுத்து விட்டு கசகசாவை மட்டும் அம்மியில் வைத்து நன்கு அரைத்து காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து குடித்து வர இரத்தபேதி, சீதபேதி, கழிச்சல், சலதோடம், தூக்கமின்மை ஆகியன நீங்குவதுடன், மலக்கிருமி, தினவு நீங்கும். உடல் அழகு, தேக வலிமை பெற்று, தாது பலமுண்டாகும்.


உடலுறவில் தளர்ந்து உணர்ச்சி குன்றியவர்கள் கசகசாவை யும், 4 பாதாம் பருப்பையும் ஊறவைத்த பின்னர் மேல்படி பருப்பை தோல் நீக்கி, கசகசாவும் சேர்த்து மை போல் நன்கு அரைத்து ஆழாக்கு காய்ச்சிய பசும்பாலும், கற்கண்டும் சேர்த்து யாவும் ஒன்றாகக் கலந்து காலையில் மட்டும் 20 நாள் முதல் 40 நாள் குடித்து வர, உடலுறவில் நல்ல நிறைவும் உணர்ச்சியும் உண்டாவதுடன், நன்மக்கட்பேறும் உண்டாகும் 


கசகசாவை வேண்டிய அளவு எடுத்து பால் விட்டரைத்து பிழிந்து பனங்கற்கண்டு சமபாகம் சேர்த்து லேகியம் போல கிளறி சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர உடல் வன்மையும், சுக்கில விருத்தியும் உண்டாகும்.


கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு சமன் அளவு எடுத்து இடித்து, தேன், போதுமான அளவு சேர்த்து லேகிய பதமாகக் கிளறி வைத்துக் கொண்டு சுண்டை அளவு சாப்பிட்டு பால் குடித்து வர வீரிய விருத்தியும், உடலுறவு சக்தியும் பலப்படும்.


கசகசாவின் காய் ஓட்டிற்குத்தான் போஸ்தக்காய் ஓடு என்பார்கள். மது விலக்கு அமுலில் இருந்த போது இந்தக் காய் ஓட்டல் குடிநீர் வைத்து போதை தரும் பொருளாக உபயோகித்து வந்தனர். தற்காலம் இதற்கு அவசியமில்லை. காரணம் மதுவிலக்குதான் எடுபட்டும் போனதே ! ஆனால் இந்த ஓட்டில் குடிநீர் செய்து கொடுக்க, அஜீரண பேதி, சீதபேதி, அதிசார பேதி ஆகியன போகும்.


போஸ்தக்காய் ஓடு, அதிவிடயம், கடுக்காய் பூ, சிறுநாகப்பூ, இவை வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்கக் காய்ச்சி வேளை ஒன்றுக்கு 100 மில்லி கொடுத்து வர, பேதிகள் யாவும் நின்று போகும்.


இந்தக் காய், செடியில் உள்ள போதே பச்சை காயின் பேரில் மாலை நேரம் சூரிய ஒளி மறைந்த பின்பு மெல்லியதாக கீறிவிட்டு விடுவார்கள். கீறின இடத்திலிருந்து பால் வடிந்து உறைந்திருக்கும். அதிகாலையில் அந்தப் பாலை எல்லாம் சேர்த்து வழித்து சேகரிப்பார்கள். இது தான் 'அபினி' என்பது. போதை தரும் பொருள்களில் அபினியைப் போன்ற கேடு செய்யும் பொருள் இல்லை. ஒரு அரிசி அளவு அபினி சாப்பிட்டவனுக்கு மூன்று நாளானாலும் போதை தெளியாது. அவ்வளவு கடுமையான போதைப் பொருள் அபினி. கடந்த நூற்றாண்டுகள் வரை சீன தேசத்தவர்கள் இந்த அபினிக்கு அடிமையாகி அவல வாழ்க்கையில் அவதியுற்றனர் என்றால் மிகையாகாது. பிறகு அபினி சாப்பிடுவதை சட்டபூர்வமாகத் தடுத்து நிறுத்திய பின்னர் தான், சீனா தலை நிமிர்ந்து நிற்கத் தொடங்கியது என்று கூறலாம்.


போதைப் பொருளாக எந்தப் பொருளையும் ஏற்றவர்கள் அதனை எப்படியாவது மறக்கவும் செய்யலாம். ஆனால் அபினியை போதைக்குப் பயன்படுத்தியவர்கள் அதிலிருந்துமீள வழிகிடையாது.எனவேதான் நம் தமிழகத்திலே அபினி சாப்பிடுபவர்களைப் பதிவு செய்து கொண்டு அவர்கள் வரையில் தாலுக்கா கஜானா மூலம் அளவுடன் கொடுத்து வந்தார்கள்.


கசகசா பால் எனப்படும் இந்த அபினி ஓர் கடுமையான போதைப் பொருள் என்றாலும், நமது சித்த மருத்துவத்திலே பலவித தீராத நோய்கட்கு அபினியைச் சுத்தி செய்து அளவுடன் கொடுப்பதால் நோய் முற்றும் நீங்கப் பெறுகின்றன.


துயரடக்கும், இசிவகற்றும் தாபமகற்றும், வியர்வை பெருக்கும்,கோழையகற்றும், சிறுநீர் பெருக்கும், உறக்கமுண்டாக்கும். குருதிப்போக்கடக்கும் வெப்பமுண்டாக்கும், தாது வெப்பமகற்றும், ஆகிய அருங்குணங்களையுடையதாகிறது. எனவே இதனை முறையோடு தக்க அளவில் தரப்படுவது சித்த மருத்துவர்களின் அனுபவமுறையாகும்.


பொதுவாக, காலரா என்ற வாந்தி பேதியைப் போக்குவதில் சிறப்புடையது. சீதபேதி, அசீரணபேதி, வாந்தி,குன்மம், சூதக 

முறையாகும்.


பொதுவாக, காலரா என்ற வாந்தி பேதியைப் போக்குவதில் சிறப்புடையது. சீதபேதி, அசீரணபேதி, வாந்தி, குன்மம், சூதகவயிற்றுவலி,உதிரப்போக்கு, பெரும்பாடு, பாண்டு, அதிமூத்திரம், மதுமேகம், பல்வலி, காதுவலி, கண்ணோய், அண்டவாதம், கீல் வாதம், இடுப்பு வலி, கால் குடைச்சல், இசிவு, வாதப்பிணிகள், உறக்கமில்லாத நோய்கள், அபஸ்மாரம், உன்மத்தம், மனக்கலக்கம் சித்தப்பிரமை ஆகிய நோயாளிகளுக்கு உடல் பலமறிந்து, மனதிடமறிந்து, அளவு அறிந்து, கால இட பேதங்களறிந்து அபினியைக் கொடுக்க நோய் முற்றும் நீங்கும்.


நோயே இல்லாதவர்கள் அபினியைப் பற்றி நினைக்கவும் கூடாது. தவறி உபயோகம் செய்பவர்களுக்கு நிச்சயம் மேற்கண்ட நோயெல்லாம் உண்டாகும் என்பதில் ஐமில்லை அதனால் தான் அபினி, கஞ்சா, போன்றவைகளைச் சித்த மருத்துவர்கட்கு கட்டுப் படுத்தி லைசென்ஸ், பர்மிட், மூலமாக வினியோகம் செய்கின்றனர்


அபினியை சுத்தி செய்யும் முறையும், அதனை மருந்தாகச் செய்து நோயாளிகட்கு வினியோகம் செய்வதும், சித்த மருத்துவம் பயின்று பரம்பரையாக செய்துவரும் மருத்துவர்கட்கே உரியதாகும். எனவே இந்த முறை செயல் விளக்கங்களை பொது மக்களுக்கு வெளி யிடுவது உகந்ததல்ல ! என்றாலும் அபினியால் தீரும் நோய்களுக்கு சித்த மருத்துவ முறைகளாவன : சாதிக்காய் மாத்திரை, சாதிக் காய்ச் சூரணம், கபாடசூரணம், கபாடலேகியம், கபாட வடகம், கட்டுவாதி மாத்திரை, அபினி எண்ணை போன்ற முறைகளை சித்த மருத்துவர்கள் முறைப்படி தயாரித்து வைத்து, குறிப்பிட்ட நோய்களுக்கு கொடுக்க பொதுமக்கள் சித்த மருத்துவர்களை உற்சாகப் படுத்தினர்.

No comments:

Post a Comment