Monday, May 20, 2024

ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோவில்..!!

 🛕              


இந்த கோவிலில் வழிபாடு செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்குகிறதா?


🌸 கோவில் என்றாலே அதில் பழங்காலத்து பெருமைகளும், தனிச் சிறப்பும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் பெருமைமிக்க கோவில்களுள் ஒன்றான ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அதிசயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.


அமைவிடம்:


🌸 இந்த கோவில் புதுச்சேரி நகரின் மைய பகுதியில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.


🌸 கோவிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் 5 சிலைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.


🌸 ராஜகோபுரத்தின் முன்புறம் சிவன் அவதாரங்களும், பின்புறம் பெருமாள் அவதாரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒன்றாக அமைந்து உள்ளது.


🌸 இந்த சிற்பங்கள், சிவன் மற்றும் பெருமாள் இருவரும் ஒரே இறைவனின் வெவ்வேறு வடிவங்கள் என்று கூறுகின்றன. ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோவிலின் ராஜகோபுரம் இந்த இறை ஒற்றுமையை அழகாக வெளிப்படுத்துகிறது.


சிறப்பம்சம்:


🌸 கோவிலின் கிழக்கு வாயிலில் அமைந்துள்ள ராஜகோபுரம் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையாக உள்ளது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.


🌸 இந்த கோவிலில் காலையில் அபிஷேகம் செய்யும் போது, ​​சிலை மேலே தானாகவே தண்ணீர் ஊற்றும் அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது.


🌸 கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொடி மரத்தின் உச்சியில் அமைந்துள்ள மணிகள் காற்றில் கலந்து ஓசையை ஏற்படுத்துகின்றன.


🌸 கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.


🌸 இக்கோவிலில் வழிபாடு செய்பவர்களுக்கு நவக்கிரக தோஷங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment