Saturday, May 25, 2024

செய்தித் துளிகள் - 25.05.2024(சனிக்கிழமை)

*தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து,பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.*

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

👉ஜூன் 6ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🎁🎁பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்.

🎁🎁பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடநூல்களை விநியோகிக்க உத்தரவு

🎁🎁தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

🎁🎁கூட்டுவு மேலாண்மை பட்டயப்படிப்பு: பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பு

🎁🎁அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

🎁🎁ஆசிரியா் மாறுதல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

🎁🎁பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

🎁🎁ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்/காப்பாளர்களுக்கு 11.01.2024 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்யுமாறு ஆதிதிராவிட நல இயக்குநர் உத்தரவு.

🎁🎁மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு - Director Proceedings வெளியீடு.

🎁🎁பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை நாம் உடனடியாக பெற்று வெரிஃபை செய்ய வேண்டும் என்ற ஆப்ஷனை தளர்த்தி, அந்த ஓடிபியை நாம்,  ஓடிபி வந்த மூன்று தினங்களுக்குள் வெரிஃபை பண்ணுவதற்கான Option - ஐ Enable செய்துள்ளார்கள்.

🎁🎁திடீரென சுழன்ற ஹெலிகாப்டரால் பரபரப்பு

👉உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் உள்ள ஆலயத்துக்கு 6 பக்தர்கள் ஹெலிகாப்டரில் சென்றனர். அப்போது இறங்குதளத்தை நெருங்கியபோது இயந்திரக் கோளாறு காரணமாக, ஹெலிகாப்டர் திடீரென சுழன்று பள்ளத்தில் இறங்கியது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி எதிலும் மோதாமல் பத்திரமாக அதனை தரையிறக்கியுள்ளார். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

🎁🎁ஒருவர் மட்டுமே பயணிக்கும் பறக்கும் கார்

அமெரிக்காவைச் சேர்ந்த Lift Aircraft நிறுவனம் HEXA என்ற பறக்கும் காரை வடிவமைத்து அசத்தல்.

18 சுழலும் சக்கரங்களைக் கொண்ட இந்த காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.

4.5 மீட்டர் அகலம், 2.6 மீட்டர் உயரம், 196 கிலோ எடை கொண்டது.

இதை ஜாய்ஸ்டிக் மூலம் சுலபமாக இயக்கமுடியும். விரைவில் இந்த கார் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🎁🎁டெல்லி மெட்ரோ ரயிலில் காங். வேட்பாளருடன் ராகுல் காந்தி பயணம்.. முக்கிய பிரச்சனையான போக்குவரத்து நெரிசல் குறித்து கலந்துரையாடல்.

🎁🎁கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகியோர் உத்தரவு

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவு.

🎁🎁உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்;இன்று புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

🎁🎁மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.

🎁🎁தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

🎁🎁முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மகளிர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு.

🎁🎁வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை; நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் வாய்த்துள்ளார் : அமைச்சர் ரகுபதி கண்டனம்.

🎁🎁ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

எந்தவித பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎁🎁சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது.  ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6650-க்கும் 

சவரன் ரூ.53200-க்கும் விற்பனை ஆகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.                                              🙏🙏🙏🙏

No comments:

Post a Comment