Wednesday, May 22, 2024

சுரைக்காய் தயிர் பச்சடி!


தேவையான பொருட்கள்

கெட்டித்தயிர் – கால் கப்


சுரைக்காய் – 1


தாளிக்க தேவையான பொருட்கள்


எண்ணெய் – 2 ஸ்பூன்


கடுகு – கால் ஸ்பூன்


உளுந்து – கால் ஸ்பூன்


பச்சை மிளகாய் – 2 (முழுதாக)


இஞ்சி – நறுக்கியது சிறிதளவு


கறிவேப்பிலை – ஒரு கொத்து


மல்லித்தழை – கொஞ்சம்


துருவிய தேங்காய் -2 ஸ்பூன்


உப்பு – தேவையான அளவு


செய்முறை :

சுரைக்காயை சுத்தம் செய்து, தோல் நீக்கி, விதைகளையும் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.


பின்னர் அதில் கால் ஸ்பூன் எண்ணைய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அடுப்பில் சிம்மில் வேகவைக்க வேண்டும். கெட்டியான தயிரில் உப்பு கலந்து அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.


வேகவைத்த சுரைக்காயை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


தாளிப்பு கரண்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.


பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.


ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சுரைக்காயை சேர்த்து, அதில் தயிரையும் சேர்த்து கலக்க வேண்டும்.


அதில் தாளித்தவற்றை சேர்த்து, மல்லித்தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் போதும். சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி தயார்.


இதை சாம்பார், ரசம் சாதம், வெரைட்டி சாதங்கள் மற்றும் வெஜி பிரியாணி என அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

No comments:

Post a Comment