Tuesday, May 28, 2024

சிவனார் வேம்பு - தினம் ஒரு மூலிகை

 **

மிகவும் சிறிய முட்டை வடிவ இலைகளையும் சிவப்பு நிற பூக்களையும் கொத்தான காய்களையும் சிவப்பு நிற தண்டினையும் உடைய மிக சிறு செடி  சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாயஞ் சிவனார் வேம்பு இது பாடல் வரி தாவரத்தைப் பறித்த அன்றே உலர்த்தாமல் எரித்தாலும் புகையை கக்கும் மூலிகை அன்றேறித்தான் பூண்டு என்றும் அழைப்பார்கள் செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது எரிச்சல் தணித்தல் வீக்கம் கட்டிகளை கரைத்தல் நஞ்சு முறித்தல் ஆகிய குணம் உடையது செடியை வேருடன் உலர்த்தி பொடித்து சமன் கற்கண்டு

தூள் கலந்து ஒரு தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர ஆயுளை நீடிப்பதோடு தொழுநோய் போன்ற கடும் நோய்களை குணப்படுத்தும் செடியை சுட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர சொறி சிரங்கு கபால கரப்பான் ஆகியவை குணமாகும் வேறால் பல் துலக்க அல்லது வேற மென்று துப்பவோ செய்தால் வாய்ப்புண் பல் வலி குணமாகும் பாக்டீரியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடும் இதற்கு உண்டு தோல் நோய்களில் உண்டாகும் தொற்றுக்களை தடுக்கும் ஆற்றல் உண்டு சரும நோய்கள் தோல் நோய்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு நன்றி.

No comments:

Post a Comment