Wednesday, May 22, 2024

கோவைக்காய் - தினம் ஒரு மூலிகை

 


*கோவைக்காய்*.   ஐந்து கோணங்கள் உடைய மாடலான காம்புடைய இலைகளையும் வெள்ளை மலர்களையும் நீண்ட முட்டை வடிவ வரி உள்ள காய்களையும் செந்நிற பழங்களையும் உடைய படர் குடி வேர் கிழங்காக வளரும் இலை காய் கிழங்கு மருத்துவ பயன் உடையது சிறுநீர் வியர்வை ஆகியவற்றை மிகுதிப்படுத்தும் குணமுடையது வாந்தி உண்டாக்கும் தன்மை உடையது ஒரு பிடி இலையை 200 மில்லி நீரில் சிதைத்து போட்டு 100 மில்லியாக காய்ச்சி காலை மாலை குடித்து வர உடல் சூடு கண் எரிச்சல் இருமல் நீர் அடைப்பு சொறி சிரங்கு புண் ஆகியவை தீரும் இளைச்சாறு 30 மில்லி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்தின் வேகம் தனியும் கோவை சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர சொறி சிரங்கு படை கரைப்பான் ஆகியவை தீரும் பச்சை காயை தினமும் சாப்பிட்டு வர மதுமேகம் தடுக்கலாம் கோவை கிழங்கு சாறு பத்து மில்லி காலை மட்டும் குடித்து வர இறை பெருமல் ஆஸ்துமா கபரோகம் மார்புச் சளி மதுமேகம் காண்டமாலை வீக்கம் ஆகியவை தீரும்.

நன்றி.

No comments:

Post a Comment