Wednesday, May 22, 2024

செய்தித் துளிகள் - 22.05.2024 (புதன்கிழமை)

அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு; கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: அரசு பெருமிதம்

👉கல்வித் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு.

🎁🎁தொலைதூர கல்வி படிப்புகளுக்கு இணையவழி சேர்க்கை : இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

🎁🎁5 ஆண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சேர்க்கை அறிவிப்பு.

🎁🎁பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது.

🎁🎁இணையதளம் வாயிலாக தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கான (D.T.Ed) மாணவர் சேர்க்கையை நடத்திட அனுமதியளித்து அரசாணை வெளியீடு.

🎁🎁பள்ளிகளில் அமலுக்கு வரவுள்ள 3 புதிய உத்தரவுகள்: பள்ளிக்கல்வித்துறை தகவல்.

🎁🎁கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.

🎁🎁ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஈரான் நாட்டின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

🎁🎁மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என கடந்த மே 10ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

🎁🎁211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் பயணித்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

🎁🎁பொது இடத்தில் ரீல்ஸ் - வழக்குப்பதிவு

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரீல்ஸ் செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


*செய்தி துளிகள்*


 

🎁🎁தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

மேமாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

அடுத்த கூட்டம் ஜூன் மாதத்தில் விரைவில் நடைபெறும் என தகவல்.

🎁🎁ஜப்பானின் கோபேயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

🎁🎁தொடர் மழை காரணமாக கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிப்பதற்கு வரும் 23ம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது. மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

🎁🎁2ம் கட்டமாக "மக்களுடன் முதல்வர் திட்டம்"

மக்களுடன் முதல்வர் திட்டம்' 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆக. 15 முதல் அக். 15-க்குள் தீர்வு காண இலக்கு- தமிழக அரசு 

🎁🎁கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் , ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

-சுகாதார துறை எச்சரிக்கை

🎁🎁திருச்சியில் நேற்று பெய்த வரலாறு காணாத கனமழையால் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சி அளித்தது திருச்சி விமான நிலையம்.

🎁🎁ஓட்டுநர் தனியார் பயிற்சி மையங்களுக்கான விதிகள்

👉ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்குவதற்கான தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 

👉4 சக்கர வாகனங்களுக்கு, ஓட்டுநர் மையத்தில் கூடுதலாக 2 ஏக்கர் நிலம் தேவை. 

👉தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் உரிய சோதனை வசதிகள் இருக்க வேண்டும்.

👉பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

🎁🎁தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

🎁🎁வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

🎁🎁சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

🎁🎁ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இனி லைசென்ஸ்

👉ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.

👉இதுவரை லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

👉இனி அதற்கு எந்த தேவையும் இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

👉இந்த புதிய விதி ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

🌹🌹உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


👉சென்னை: சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ், தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (எம்ஏ தமிழ்) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (பிஎச்டி) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகிறது. 2024-25ம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


இந்த படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் (அ) அஞ்சலில் இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது)


நகலுடன் இணைத்து இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் வரும் ஜூன் மாதம் 7ம் தேதிக்குள் அளித்தல் வேண்டும். மேலும் தகவல் பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🎁🎁🎁🎁🌹🎁🎁🎁🎁🎁

🌹🌹அவசர அவசிய உதவி எண்கள்:-


👉1.)அவசர உதவி அனைத்திற்கும்

911/112

👉2.)வங்கித் திருட்டு உதவிக்கு

9840814100

👉3.)மனிதஉரிமைகள் ஆணையம்

044-22410377

👉4.)மாநகரபேருந்தில் அத்துமீறல்

09383337639

👉5.)போலீஸ்

9500099100 or 100

👉6.)போலீஸ் மீது ஊழல் புகாருக்கு

9840983832

👉7.)போக்குவரத்து விதிமீறல்

98400 00103

👉8.)தீயணைப்புத்துறை

101

👉9.)போக்குவரத்து விதிமீறல்

103

👉10.)விபத்து 100, 103

👉11.)ஆம்புலன்ஸ் 102, 108

👉12.)பெண்களுக்கான அவசர உதவி 1091

👉13.)குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

👉14.)அவசர காலம் மற்றும் விபத்து

1099

👉15.)முதியோர்களுக்கான அவசர உதவி 1253

👉16.)தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி 1033

👉17.)கடலோர பகுதி அவசர உதவி

1093

👉18.)ரத்த வங்கி அவசர உதவி

1910

👉19.)கண் வங்கி அவசர உதவி -

1919

👉20.)விலங்குகள் பாதுகாப்பு

044-22354959

044-22300666 


👉1098 இந்த நம்பரை  பெண் பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்புங்கள்...

🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment