Tuesday, May 21, 2024

செய்தித் துளிகள் 21.05.2024 (செவ்வாய்க்கிழமை)


📕📘11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களை மறு தேர்விற்கு பள்ளிக்கு வந்து விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

📕📘Teacher Transfer Counseling - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு.

📕📘TPF/GPF ACCOUNT SLIP

2023-2024 ஆம் நிதியாண்டின் பொது வருங்கால வைப்பு நிதி/ ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

📕📘தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் 20.05.2024 ஆக இருந்தது 24.05.2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகிறது.

📕📘தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு.

📕📘அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 20% உயர்த்த பரிசீலனை

📕📘மாணவர்கள் வகுப்புகளை 'கட்' அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்: பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்: பள்ளி கல்வித் துறை அதிரடி

📕📘போலி பல்கலைக் கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு.

📕📘' நீட் ' தேர்வில் இடம்பெற்ற 200 வினாக்களில் 113 கேள்விகள் அரசு இலவச ‘ நீட் ’ பயிற்சி தேர்வுகளில் கேட்கப்பட்டவை

📕📘‘ஒடிபி’யை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள்


*செய்தி துளிகள்*



📕📘வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை வழங்க முடிவு

📕📘குற்றாலம் அருவியில் வெள்ளத்தால் சிறுவன் பலி - சென்சார் கருவிகளை பொருத்த முடிவு 

📕📘த.வெ.க. தலைவர் விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தால் செல்வேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து

📕📘ஐந்தருவியை போல பழைய குற்றாலம், மெயினருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு 

📕📘அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு 3 ஆம் உலகப்போர் தொடங்கலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கணிப்பு 

📕📘டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி 25 ஆம் தேதி அமெரிக்கா பயணம்

📕📘தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - சாத்விக், சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

📕📘சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை  உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் தாய் ரம்யா கோவை காரமடையில் தற்கொலை செய்துகொண்டார்.

📕📘உலகின் உயரமான சிகரமான மவுண்ட் எவரெஸ்ட்டை எட்டிய காவல்துறையைச் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த ப்ரித்தியா யாஷினி படைத்துள்ளார்.

📕📘மக்களவை தேர்தலை முன்னிட்டு மே மாதத்தில் 17ம் தேதி வரை ரூ. 28,200 கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் விற்றுள்ளன.

📕📘சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

📕📘தாய்லாந்து ஓபன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ஜோடி வெற்றி பெற்று பட்டம் வென்றது.

📕📘ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் ஈரான் அதிபருடன் பயணித்த 2 அமைச்சர்களும் உயிரிழப்பு

ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் அரசு ஊடகம் தகவல்

அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

📕📘சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.55,200-க்கு விற்பனை 

ஒரு கிராம் தங்கம் ரூ.6,900-க்கு விற்பனை

📕📘குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன் என்பது தெரிய வந்துள்ளது

3 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு

கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நடந்த சோகம்

மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக தென்காசி சென்றிருந்தபோது வெள்ளத்தில் மகனை பறிகொடுத்ததாக பெற்றோர் வேதனை

📕📘மார்ச் 1 - மே 19 வரை இயல்பை விட 17% குறைவாக மழை பெய்துள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியுள்ளோம்: பேரிடர் மேலாண்மைத்துறை

📕📘அயலகத் தமிழர்களுக்கான நலத் திட்டங்கள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு.

📕📘திருப்பதி: ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்லும் அலிபிரி நடைபாதை பகுதியில் 2 சிறுத்தைகள் தென்பட்டதால், பக்தர்கள் அலறல்

பக்தர்களின் கூச்சலை அடுத்து சிறுத்தைகள் வனத்திற்குள் ஓடி விட்டன. அப்பகுதியில் வனத்துறையினர், போலீசார் விசாரணை

சிறுத்தை அச்சுறுத்தலால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்

📕📘ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு - இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்று (மே 21) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

📕📘ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு.

📕📘சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

No comments:

Post a Comment