Thursday, January 4, 2024

பாலும் கசக்கல, துணியும் கசக்கல.

திருவாளர் புலவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் சிறந்த தமிழ் அறிஞர்.



திருமுறைகள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்.

தமிழை மிகவும் நேசித்த புலவர். இவரது ஆற்றலைக்

கண்டு வியந்த பல திருமடங்களும் இவருக்குப் பரிசும், பட்டமும் அளித்துப்

பெருமைப் படுத்தின.




அவர் நோய் வாய்ப்

பட்டு தளர்ந்து போனார். அவர் ஒரு நாள் இறக்கும் தருவாயில், அவரது உறவினர்கள்,

அவர் அருகில் இருந்த ஒரு துணியை எடுத்து பாலில் நனைத்து,

அவரது வாயில் சொட்டுச்

சொட்டாக விட்டனர்.




பாலின் ஒரு சொட்டு அவரது வாயில் விழுந்தவுடன் அவரோ முகம் சுழித்தார்.




ஒரு வேளை பால் கசக்கிறதோ! என நினைத்த அவரது உறவினர்கள், ”கசக்கிறதா?” என்று அவரிடம் கேட்டனர். புலவர் அல்லவா? அரசஞ் சண்முகனார், மரணத்தின் விளிம்பிலும்,

வார்த்தைகளால் தமிழில் விளையாடினார். ”ஐயா பால் கசக்கல,

துணியும் கசக்கல!” என்று பால் நனைத்த துணி அழுக்காக இருப்பதைக் குறிப்பிட்டார்.




அப்போது தான் உறவினர்கள் அழுக்குத்

துணியை எடுத்து பாலில் நனைத்து,

அவரது வாயில் பால் விட்டது தவறு என்று உணர்ந்தார்கள்.



No comments:

Post a Comment