Thursday, May 30, 2024

செய்தித்துளிகள் - 30.05.2024 (வியாழக்கிழமை)

பொறியியல் கலந்தாய்வுக்கு நேற்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு

செய்துள்ளனர்.

⛑️⛑️11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

⛑️⛑️அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 31/05/2024 பிற்பகல் விடுவிப்பு - தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️TRB Exam - பட்டதாரி ஆசிரியர்‌ தேர்வு - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை

⛑️⛑️ஆக.3, 4-ல் அரசு கணினி சான்றிதழ் தேர்வு - கல்வித்துறை அறிவிப்பு

⛑️⛑️நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி (NSNOP) இணையதளம் வழியாக பெறுதல் - Director Proceedings வெளியீடு.

⛑️⛑️பீகார் மாநிலத்தில் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

⛑️⛑️கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு.

⛑️⛑️மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியீடு.

பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

⛑️⛑️மருத்துவமனையில் நான் நன்றாக இருக்கிறேன். அறுவை சிகிச்சை முடிந்து முழுமையாக மீண்டு விரைவில் வீடு திரும்புவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீடியோ வெளியீடு.

⛑️⛑️நெல்லை-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.30க்கு எழும்பூர் வந்தடையும் என தகவல்.

⛑️⛑️தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

⛑️⛑️டெல்லியில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு உத்தரவு.

கார்களைக் கழுவ குழாய் நீரைப் பயன்படுத்துதல், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிதல், கட்டுமானம் மற்றும் வணிக நோக்கங்களுக்காக தண்ணீரைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவைக்கும் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அமைச்சர் அதிஷி எச்சரிக்கை

வீண் தண்ணீர் செலவை தடுக்கும் வகையில் டெல்லி நகரம் முழுவதும்  200  குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்துமாறு டெல்லி ஜல் போர்டு தலைமை அதிகாரிக்கு அமைச்சர் அதிஷி உத்தரவு.

⛑️⛑️டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக 126°F (52.3°C) வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி!

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஊள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

⛑️⛑️"18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து"

வாகனத்தின் ஆர்.சி-யை ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமல்

பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

⛑️⛑️கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் தயார்: ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்                                                    ⛑️⛑️வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு

⛑️⛑️கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்.

⛑️⛑️முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு

⛑️⛑️பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று ரத்து

⛑️⛑️ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை

⛑️⛑️மூன்றாவது நாளாக ஏற்றத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை

⛑️⛑️முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக திகழ்கிறது.! அரசு பெருமிதம்

⛑️⛑️பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்த குமரி கடல்: 3 நாட்கள் பயணமாக இன்று கன்னியாகுமரி வரவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

⛑️⛑️ மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல்

⛑️⛑️கலைஞரின் கனவு இல்லம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது:-

👉கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடி செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

👉வீடுகள் அனைத்தும் 360 சதுர அடியில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.

👉300 சதுர அடி RCC கூரையுடன், மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரையாக அமைக்கப்பட வேண்டும்.

👉வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட வேண்டும்.

👉ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

👉கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.

👉குடிசை வீடுகள் சர்வே விவரங்களை மே 31ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒரு வீட்டுக்கு ரூ. 3.10 லட்சம் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டமே, கலைஞரின் கனவு இல்லம் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

👉கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் நோக்கமே, குடிசைகளில் வசித்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக சிமெண்ட் கூரை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படுவதாகும். குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவா்களே, இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவா்கள். சொந்தமான நிலம், பட்டா உள்ளவா்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் அதே இடத்தில் வீடு கட்டத் தகுதி படைத்தவா்கள்.

👉புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைக்குப் பதிலாக இந்தத் திட்டத்தில் வீடு கட்ட இயலாது. அதேசமயம், புறம்போக்கு இடம் ஆட்சேபனை அற்றது என்று வருவாய்த் துறையால் முறைப்படுத்தப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம்.

👉யாரெல்லாம் தகுதியற்றவா்கள்? வாடகை குடிசை வீட்டில் குடியிருப்பவா்கள், கலைஞா் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்ட இயலாது. வணிக நோக்கத்துக்காக, விலங்குகளுக்காக பயன்படுத்தப்படும் குடிசைகளும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதி இல்லாதவை. குடிசையில் ஒருபகுதி ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட், உலோகத் தகடால் ஆனதாக இருந்தால் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்ட நிதி தரப்படாது. சொந்தமாக வீடு உள்ளவா்கள், அரசுப் பணியாளா்கள் ஆகியோரும் திட்டத்தின் கீழ் தகுதி இல்லாதவா்கள். பயனாளிகள் தோ்வு செய்யப்படும் முறை, குடிசைகள் விவரம்  ஆகியவற்றை இணையதளங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

👉தகுதியான நபா்களை உறுதி செய்வதற்கென தனிக் குழுவை ஆட்சியா்கள் அமைக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா், உதவிப் பொறியாளா் அல்லது ஒன்றியப் பொறியாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஒன்றிய மேற்பாா்வையாளா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகியோா் குழுவில் இடம்பெற்றிருப்பா். குடிசை வீடுகளின் பட்டியல் அந்தந்த ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

👉வீடுகள் அனைத்தும் குறைந்தது 360 சதுர அடியுடன் இருக்க வேண்டும். அதில், 300 சதுர அடி ஆா்சிசி கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டப்பட வேண்டும். கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் கண்டிப்பாகத் தவிா்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏

No comments:

Post a Comment