Thursday, May 16, 2024

கொள்ளு - தினம் ஒரு மூலிகை

*கொள்ளு.*.     கொழுப்பு உடல் எடை குறைக்கும் கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு இலைத்தவனுக்கு எள்ளு கொழுப்பை குறைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு இது ஒரு ஆரோக்கிய உணவு ஊற வைத்தோ வருதோ சாப்பிடலாம் ரசம் துவையல் என விதவிதமாக சமைத்து சாப்பிடலாம் கொள்ளை ஊற வைத்த நீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது வைட்டமின்கள் புரதச்சத்து இரும்பு சத்து ஆகியவை நிறைவாக உள்ளது நம் உடல் வளர்ச்சிக்கு திசுக்கள் முறையாக வேலை செய்யவும் பழுதடைந்த திசுக்களை சரி செய்யவும் இதில் உள்ள புரதம் உதவுகிறது உடல் எடையை குறைக்க முதல் நாள் இரவு ஒரு கைப்பிடி கொள்ளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் தேவையற்ற கொழுப்புகள் குறையும் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது உடல் உறுப்புக்களை பலம் பெற வைக்க நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றவும் எலும்புக்கும் நரம்பிற்கும் வலு சேர்க்கும் அரிசியுடன் சேர்த்து கஞ்சியாக உட்கொள்ளலாம் இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறிய அளவிலான சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும். 

குறிப்பாக கால்சியம் ஆக்சலேட் வகை சிறுநீரக கற்களை கரைக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது கொள்ளையும் இந்துப்பு சிறிது எடுத்து அவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் சிறுநீரகப் பாதை போன்ற உறுப்புகளில் சேரும் கற்கள் கரையும் இதில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு சத்து அமினோ அமிலங்கள் உள்ளன இவை ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து மலட்டுத்தன்மையை நீக்க உதவுகிறது மாதவிடாய் காலங்களில் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் கொள்ளு நீரை அருந்தலாம் மேற்கண்ட குடிநீரில் சுக்கு பெருங்காயம் ஆகியவற்றின் பொடி வகைக்கு அரை கிராம் கலக்கி சாப்பிட வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலி குணமாகும்.

நன்றி

No comments:

Post a Comment