Saturday, May 25, 2024

கைதொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை ஒத்துக் கொள்

இன்று எவ்வளவு தான் விழுந்து விழுந்து படித்தாலும் இவர்களின் தயவு நமக்கு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.  


என்னதான் படித்தாலும் கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்.. 

"புரோட்டா மாஸ்டர் தேவை! மாதம் முப்பதாயிரம் சம்பளம்" என ஒரு பத்தியிலும், அடுத்த பத்தியில் "இஞ்சினீயர் தேவை மாதம் பனிரெண்டாயிரம் சம்பளம்" எனவும் விளம்பரம் இருக்கும்.


ஒரு கொத்தனார் ஒரு நாளைக்கு ஆயிரம்...

உதவி ஆளுக்கு எழுநூறு...

அதேபோல் வயலில் நான்கு மணி நேர வேலைக்கு அறுநூறு....


உரம் போடுவதற்கு மூட்டைக்கு இருநூறு... அவர் ஒருமணி நேரத்தில் அறுநூறு சம்பாதிப்பார்.

கூடவே டீ வடையும்.


ஆனால் ஒரு கடையில் பனிரெண்டு மணி நேரம் வேலை பார்ப்பவருக்கு நானூறு.


நம் சமுதாயத்தை பொறுத்த வரை ஒருவர் படித்தால் அவருக்கு சம்பளம் அதிகம் என்ற காலம் தற்போது மலையேறிவிட்டது!

ஒரு காலத்தில் அன்றாட வேலை பார்த்தவர்கள் ஒரு ரூபாய் வாங்கும் போது படித்தவர்கள் 10 ரூபாய் வாங்கினார்கள்.


"நான்தான் அன்றாட வேலை பார்க்கிறேன்! என் மகனாவது படித்து நல்லா இருக்கட்டும் "என பெரும்பாலனவர்கள் எண்ணமாக இருந்தது!


"அப்ப, படித்தால் சம்பாதிக்க முடியாதா?" என்ற கேள்வியும் எழுகிறது.

படிப்பை நாம் சம்பாதிக்க வழிகாட்டியாக வைத்துக் கொள்ளனுமே தவிர அந்த படிப்பே நமக்கு சம்பாதியத்தை தராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


தற்போதைய நிலைமையில் படிப்புக்கேற்ற சம்பாத்தியம் என்பது மருத்துவம் அதற்கு சமமான உயர் படிப்பு இப்படித்தான் இருக்கிறது.


தற்போதை சூழ்நிலையில் பார்த்தால் இன்னும் பத்து வருடத்தில் இந்தியாவில் மருத்துவர்களின் நிலைமையும் இஞ்சினீயர் அளவுக்கு வந்து விடும்.


படித்தவனுக்கே சம்பளம் கம்மி, படிக்காதவனுக்கு ஏன் உயர்வு என்றால் இங்கு உழைக்க யாரும் தயாரில்லை!

உடல் உழைப்பை யாரும் விரும்புவதில்லை,

"நான் படிச்சுட்டேன் ஏன் உழைக்கனும்?" என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.


இன்றையத் தேதியில் ஒரு நகரத்தில் நீங்கள் நினைத்தால், ஒரு மணி நேரத்தில் பத்து இஞ்சினீயரை அழைக்கலாம்

ஆனால் ஒரு கொத்தனாரையோ, எலக்ட்ரீசியனையோ, ஏசி மெக்கானிக்கையோ,பெயின்டரையோ, தச்சரையோ அழைக்க ஒரு வாரம் நீங்கள் காத்து இருக்கனும்.


நாம் என்ன படிச்சா என்ன!

முதலில் நாம் உழைக்கக் கற்றுக் கொண்டால் நம் வாழ்வு தானாக உயரும்...

No comments:

Post a Comment