Saturday, May 11, 2024

கிராம்பு - தினம் ஒரு மூலிகை

 


*தினம் ஒரு மூலிகை* *கிராம்பு*.        மசாலா பொருட்களில் இதற்கென தனி இடம் உண்டு உணவுகளிலும் பானங்களிலும் சுவை கூட்ட மனம் கூட்ட சிறந்த உணவுப் பொருள் அதிகமான பயன்பாடுகள் சில பக்க விளைவுகளை உண்டாக்கும் கிராம்பு என்பதை அறிந்து பயன்படுத்துவதே அவசியம் ஆகும் கிராம்பு நறுமணமிக்க பயிர் அரோமோதெரபி பல் மருத்துவத்திற்கான எண்ணெய் வடிவில் இதை பயன்படுகிறது வயிற்றுப்போக்கு முகப்பரு செரிமான பிரச்சனைகள் சளி மற்றும் இருமல் பிரச்சனைகளுக்கு கிராம்பு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது கிராம்பு பொடியை அரை கிராம் தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலப்படும் இரண்டு கிராம் கிராம்பு பொடியை சமன் பனைவெல்லத்தில் கலந்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்களும் காலை மாலை கொடுத்து வர உதிர சிக்கலும் அதனால் ஏற்படும் அடிவயிற்று வலியும் தீரும் கிராம்பு பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர வாய் நாற்றம் ஈறு வீக்கம் பல் வலி ஆகியவை குணமாகும்.

நன்றி

No comments:

Post a Comment