Thursday, May 23, 2024

செய்தித் துளிகள் - 23.05.2024(வியாழக்கிழமை)

⛑️⛑️அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை. சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டம்

தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாணவர்களுக்கு ஏற்ப மாறுபாடு இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தனித்தனியாக அளவு எடுத்து, மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தைக்க திட்டம்.


⛑️⛑️பள்ளிகளுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவு வெளியீடு.


⛑️⛑️RTE 25%  இலவச

மாணவர் சேர்க்கை: 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


⛑️⛑️இனி பட்டா மாறுதல் ரொம்ப ஈசி! தாசில்தார் ஆபிஸுக்கு போகவே தேவையில்லை. தமிழக அரசின் அசத்தல் செயலி.

வீட்டில் இருந்தபடியே இனி பட்டா மாறுதல் செய்யலாம். இதற்காக தமிழக அரசு ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.


⛑️⛑️ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின்  நிறைவேற்றுவார் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதி அளித்தார். 

👉திருநெல்வேலி திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் ஊதியம் குறித்த கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவிக்க வேண்டியதன் நிமித்தம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனனை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.


*செய்தி துளிகள்*


⛑️⛑️சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல்,வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

⛑️⛑️பகை என்னுடன்தான் உள்ளது, என்னை துஷ்பிரயோகம் செய்யுங்கள். ஆனால் இந்த நாட்டு மக்களை துஷ்பிரயோகம் செய்தால், யாரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என அமித்ஷா பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

⛑️⛑️ஆசிய ரிலே பந்தயத்தில்  4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றது.

⛑️⛑️வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!

வங்கதேச அணி தற்போது அமெரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் T20 போட்டியில் அமெரிக்கா அணி, வங்கதேசத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது. 

இதன்மூலம், வங்கதேசத்துக்கு எதிராக அமெரிக்க அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 

⛑️⛑️டில்லியில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதியை ஊபர் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த குளிர்சாதன பேருந்து சேவை அந்நிறுவனத்தின் ஊபர் ஷட்டில் மூலமாக நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

⛑️⛑️சிசுவின் பாலினத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரை சந்தித்து தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் வழங்கினார் யூடியூபர் இர்ஃபான்

⛑️⛑️விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கா் ஒட்டியுள்ளோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பெருநகர சென்னை காவல்துறை அறிவித்திருந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

⛑️⛑️ஜூன் 1 முதல் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

⛑️⛑️சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் வரும் 26ம் தேதி வரை தினமும் சுற்றுலா பேக்கேஜ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு

👉அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!

👉சேலத்திலிருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல பேக்கேஜ் வசதி

👉ஒரு பயணிக்கு கட்டணம் ₹.300/-

👉கரடியூர் காட்சி முனை

👉சேர்வராயன் கோவில்

👉மஞ்சக்குட்டை காட்சி முனை

👉பக்கோடா பாயிண்ட்

👉ஏற்காடு ஏரி

👉லேடீஸ் சீட்

👉அண்ணா பூங்கா

👉ஜென்ஸ் சீட்

👉மான் பூங்கா

👉ரோஸ் கார்டன்

👉தாவரவியல் தோட்டம்

👉22.05.2024 முதல் 26.05.2024 வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 7.00 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலேயே நிறைவடையும்.

👉பயணிகள் இந்த வசதியை, அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம்.

⛑️⛑️புனே விபத்து - ₹1758 செலுத்தி பதிவு எண் பெறாமல், சாலையில் பல மாதங்களாக சுற்றி வந்த ₹2.5 கோடி மதிப்பிலான சொகுசு கார்

புனேயில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி, இருவர் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய ₹2.5 கோடி மதிப்பிலான Porsche கார்,

₹1,758 கட்டணமாக செலுத்தாததால், இன்னும் பதிவு செய்யப்படவில்லை என மாநில அரசு தகவல்.

⛑️⛑️இனி பட்டா மாறுதல் ரொம்ப ஈசி! தாசில்தார் ஆபிஸுக்கு போகவே தேவையில்லை. தமிழக அரசின் அசத்தல் செயலி.

வீட்டில் இருந்தபடியே இனி பட்டா மாறுதல் செய்யலாம். இதற்காக தமிழக அரசு ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.

⛑️⛑️போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை: மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வாக்குமூலம்

⛑️⛑️சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள் : பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.

⛑️⛑️வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் ஜூன் மாதம் தொடக்கம்.

⛑️⛑️சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவன் நியமனம்;

👉சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு.

👉மே 24-ம் தேதி முதல் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார்.

⛑️⛑️அரசுப் பேருந்துகளில், போலீசார் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை

நெல்லை அருகே காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

வாரண்ட் இருந்தால் மட்டுமே போலீசார் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் - போக்குவரத்துத்துறை

நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க  போக்குவரத்து துறை பரிந்துரை.

⛑️⛑️நாளுக்கு நாள் அதிகரிக்கும்  டெங்கு

“இந்தாண்டு காலநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது;

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்;

கடந்த 22 நாட்களில் 170 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்;

குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு”

பொது சுகாதாரத்துறை தகவல்.

⛑️⛑️சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை; ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

⛑️⛑️ராஜஸ்தானின் முன்னாள் அமைச்சரும், பரத்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவருமான விஸ்வேந்திர சிங், தன்னை சித்ரவதை செய்ததாக தனது மனைவி மற்றும் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment