Tuesday, May 28, 2024

செய்தித் துளிகள் - 28.05.2024 (செவ்வாய்க்கிழமை)

🎁🎁பட்டதாரி, வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு TRB தகவல்.

🎁🎁OTP Verify செய்யாமல் TC வழங்கப்பட்டு Common Pool அனுப்பப்பட்ட மாணவர்களுக்கு OTP Verify செய்ய வழிமுறைகள் வெளியீடு.

🎁🎁குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட, புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு.

🎁🎁பள்ளிக்கல்வி துறை அலுவலகங்களில் காலக்கெடு முடிந்த கோப்புகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்: இயக்குநர்கள் அறிவுறுத்தல்

🎁🎁பள்ளி கல்வி திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய நார்வே நாட்டு கல்வி அதிகாரிகளுக்கு அழைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.

🎁🎁அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

🎁🎁குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

👉தமிழ்நாட்டில் ஜூன் 9ம் தேதி நடைபெறும் குரூப் - 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

👉தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியீடு                                                               🎁🎁தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்

அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

மதிய உணவினை உரிய நேரத்தில் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் சுற்றறிக்கை

சிறப்பு பள்ளி பயனாளிகளுக்கு உணவை முறையாக வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு

தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவு.

🎁🎁கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு நியமன அலுவலரே (Appointing Authority) பணிவரன்முறை செய்து ஆணை வழங்கலாம் - DSE செயல்முறைகள் வெளியீடு.

🎁🎁வாழ்வுச் சான்று சமா்ப்பிப்பு நடைமுறை: மீண்டும் பழைய முறைக்கு மாற்ற ஓய்வூதியா்கள் வேண்டுகோள்

🎁🎁அரசு இசைப்பள்ளியில் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

🎁🎁முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவ மாணவரின் கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்க உத்தரவு.

🎁🎁புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம்.. முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே முதலிடம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்.

🎁🎁தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்.

🎁🎁தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை.

🎁🎁New Western Norway பல்கலைக்கழகத்தில் பசுமை ஆற்றல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் தமிழ் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

இம்மாணவர்களை வழிநடத்தும் பேராசிரியர் தயாளனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, "இயற்கையின் மீது அன்பு கொண்டு தாங்கள் மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சி பற்றி தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துரைப்போம்" என தெரிவித்து, மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

🎁🎁+2 மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல் பெறலாம்.

👉+2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

👉இன்று பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.

👉மறுகூட்டலுக்கு இதே இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்குமாறும், விண்ணப்ப படிவத்தை வரும் மே 29 முதல் ஜூன் 1 வரை நேரில் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🎁🎁இன்று முதல் கலந்தாய்வு.கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

🎁🎁வாடகை வீட்டில் உள்ளோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி.

🎁🎁வெளிநாட்டில் வேலை என மோசடி; எச்சரிக்கையாக இருக்க அயலக தமிழர் நலத்துறை வேண்டுக்கோள்.

🎁🎁இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.

🎁🎁மே மாதத்தில் மட்டும் ரூ. 22, 000 கோடிக்கு அந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர்.

🎁🎁நடப்பாண்டிற்கான ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு, 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

👉இரண்டாம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு ₹12.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

🎁🎁இளைஞர்களை டார்கெட் செய்யும் கோ-ஆப்டெக்ஸ்

இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில், தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு

இளைஞர்கள் அதிகளவில் விரும்பும் Printed Shirts-ஐ வரும் டிசம்பருக்குள் அறிமுகம் செய்கிறது கோ-ஆப்டெக்ஸ்

🎁🎁இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூன் 1 வரை ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், PET-CT ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளதாகக் கூறி நீட்டிப்பு கோரியுள்ளார்.

🎁🎁தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 234 அறைகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் 

-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ

🎁🎁அயனாவரம்: லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு கூறியபோது, சார்ஜரை கையில் பிடித்தவாரே இறந்து கிடந்துள்ளார்.

🎁🎁ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது முதல் 180KW DC ஃபாஸ்ட் பொது EV சார்ஜிங் நிலையத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியது

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் 100 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நிறுவ ஹூண்டாய் நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.

🎁🎁தமிழகத்தில் சென்னையில் மட்டும் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு நேற்று வெப்பநிலை இருந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 40.6 டிகிரியும், வேலூரில் 39.9 டிகிரி அளவுக்கு நேற்று வெப்பநிலை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎁🎁பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டுள்ளதாக ஐநா அதிர்ச்சித் தகவல்

3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த பேரழிவுகரமான நிலச்சரிவில் 30 அடி ஆழத்துக்கு இடிபாடுகள் குவிந்து கிடப்பதால், மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாமல் செய்வதறியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.

🎁🎁புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை இன்றி “சிறுநீரக கற்களை அகற்றும் கருவி”நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.4000/- (நான்காயிரம் ரூபாய்) செலுத்தி இச்சலுகையை  பெற்றுக் கொள்ளலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது...

JIPMER Hospital Puducherry 

For Appointment Contact  : 

 0413 2296562 

 0413 2296000

 0413 2272380

 0413 2298200

 0413 2272385

 0413 2272389

 0413 2272381

 0413 2272382

 0413 2272383

 0413 2272384

 0413 2272385 

 0413 2272386

 0413 2272387

 0413 2272388

தேவைப்படுவோரை பயன்பெற செய்யுங்கள்.

🎁🎁இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை: தேர்தல் வெற்றிக்குப் பிறகான செயல்திட்டங்களை விவாதிக்க திட்டம்.!                                                     🎁🎁ஜியோ, ஏர்டெல், வோடஃபோனுக்கு அரசு உத்தரவு                     👉இந்திய எண்களுடன் வரும் மோசடி வெளிநாட்டு அழைப்புகளை முடக்கும்படி, ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், இந்தியாவில் இருந்து மேற்கொள்வது போல வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகள், போலி அழைப்புகள் மூலம், சைபர் கிரைம், நிதிமோசடியில் ஈடுபடுவதாகவும், அத்தகைய அழைப்புகளை அடையாளம் கண்டு முடக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

🎁🎁திருடர்களை பிடிக்க முயன்றபோது நடந்த சோகம்..

ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் (37) பலி

General Hospital என்ற தொலைக்காட்சி தொடர், USS Indianapolis: Men of Courage, Siberia உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

🎁🎁குறைந்த வயதில் எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

குறைந்த வயதில் (16) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் மும்பையை சேர்ந்த காம்யா கார்த்திகேயன்.

No comments:

Post a Comment