Friday, May 17, 2024

சிந்தனைத் துளிகள் - 17052024

படிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும் 

ரசிக்கத் தெரியாதவர்

கையில் இருக்கும் வாழ்க்கையும் 

வீணாகி தான் விடுகிறது.!


வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் 

சிலரிடமிருந்து விலகி  

இருப்பதும் நல்லது.

அவ்வாறு செய்வது நம் சுயநலத்துக்காக அல்ல,

நம் தன்மானத்திற்காக.!!


யாரை பாவம் என்று நினைத்தோமோ 

அவர்கள் தான் 

நமக்கு நல்ல பாடங்களை கற்றுத் தந்து விடுகின்றனர்.!!!


அன்பையும் அறிவுரையையும் 

அதைப் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே 

கொடுக்கப்படவேண்டும்...

இல்லையென்றால் ஏமாற்றங்களும், அவமானங்களும் தான் மிஞ்சும்.!


பக்கபலமாக இருக்கவேண்டிய உறவுகள் எல்லாம் 

தவறான புரிதல்களால் 

நம்மை பலவீனப்படுத்தியே செல்கிறார்கள்...

வார்த்தையால் சிலர்...

செய்கையால் சிலர்...

மெளனத்தால் சிலர்.!!


புயலும்,கோபமும் ஒன்றுதான்...

ஏனெனில் வீசும்போதும்...

பேசும்போதும்...

ஒன்றும் தெரியாது...

அடங்கிய பிறகு தான்

தெரியும் அதன் சேதம் 

என்னவென்று.!!!


 

No comments:

Post a Comment