Friday, March 22, 2024

செய்தி துளிகள் 22/03/2024 வெள்ளி

📕📘1 முதல் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 02.04.2024 ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இறுதி பருவத்தேர்வுகள் நடைபெறும்.  

👉ஏப்ரல் 13 ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை.

👉ஆசிரியர்கள் 23-04.2024 ம் தேதியிலிருந்து 26 ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியும், மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவு.

👉ஏப்ரல் 26ஆம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகும்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். -தமிழ்நாடு அரசு.

📕📘முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருந்த நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதியே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📕📘பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

📕📘மாணவர் சேர்க்கை குறைந்த அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு: பள்ளிக்கல்வித் துறையின் நடவடிக்கையால் சர்ச்சை 

📕📘தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு அனுமதிக்கப்படும் தர ஊதியம் குறித்து அரசின் தெளிவுரைக் கடிதம் வெளியாகி உள்ளது.

📕📘போலியான காரணங்களுடன் தேர்தல் பணியை புறக்கணிக்கும் பட்சத்தில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

📕📘பத்தாம் வகுப்பு செய்முறை பொது தேர்வுக்கான உழைப் பூதியப்பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது - அரசு உதவி தேர்வுகள் இயக்குனர் தகவல்

📕📘பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன்  நிறைவு; மே 6ல் ரிசல்ட்

📕📘பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.

📕📘பள்ளி, கல்லூரி அரசு விடுதிகளில் பயோமெட்ரிக் பதிவு அமலாகிறது.

📕📘பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு 

மார்ச் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.

📕📘சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு

📕📘புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹760 அதிகரிப்பு

ஒரு சவரன் தங்கம் ₹49,880-க்கு விற்பனை

கிராமுக்கு ₹95 உயர்ந்து, ₹6,235க்கு விற்பனை

📕📘Viksit Bharat எனும் பெயரில் அனைவருக்கும் வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

📕📘தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி!

👉பா.ம.க.வுக்கு 10 தொகுதிகளும்,                                                   👉த.மா.க.வுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு

👉4 தொகுதியில் பாஜக சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டி

-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

📕📘ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு

பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று வரை உச்சநீதிமன்றம் கெடு

குற்றவாளி தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த நபர் குற்றவாளி இல்லையென்றே அர்த்தம்

இன்றுக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிடும் எனவும் எச்சரிக்கை

 - தலைமை நீதிபதி

📕📘சி.எஸ்.கே. கேப்டனாக தோனிக்கு பதிலாக ருதுராஜ்

நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமனம்

📕📘ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டி

📕📘டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

📕📘தேர்தல் ஆணைய தரவுகளின் படி 2 வது நாள் முடிவில் தமிழகத்தில் 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

📕📘என்னை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு டெபாசிட் காலி.. 

40 தொகுதியின் வெற்றியையும் முதல்வர் காலில் சமர்பிக்க வேண்டும்.. தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய 

தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு

📕📘தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக அடையாள எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆனைத்திடம் சமர்ப்பித்தது SBI வங்கி

📕📘காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

எங்களால் தேர்தல் பரப்புரைகளுக்குச் செலவு செய்ய முடியவில்லை. இது பாஜக செய்யும் கிரிமினல் செயல்

நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அமைதி காக்கின்றன

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.

📕📘விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல்

அதிமுக சார்பில் ராணி போட்டி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

📕📘பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள்

👉மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில்  அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளதாக தகவல்

📕📘அதிமுகவை பலவீனமாக எடை போட வேண்டாம்

அதிமுக நிர்வாகிகளுக்கு எதிரான சோதனையை சட்டபடி எதிர்கொள்வோம்  

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே  சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இயக்கம் 

எடப்பாடி பழனிச்சாமி

📕📘மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

📕📘ஜக்கி வாசுதேவிடம் தொலைபேசியில்  நலம் விசாரித்தேன் 

ஜக்கி வாசுதேவ் பூரண நலம் பெற வேண்டுகிறேன் 

பிரதமர் மோடி

📕📘“தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்

தமிழர்களை அவமதித்து பேசிய மத்திய அமைச்சர்.

அவரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஏப்ரல் 19இல் பதிலடி தருவர்.

நடிகர் கமல்ஹாசன்

📕📘தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் 

வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் 

தேர்தல் ஆணையம்.

📕📘சேப்பாக்கத்தில் களைகட்டும் கிரிக்கெட் திருவிழா: 17வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று துவக்கம்.! முதல் போட்டியில் சிஎஸ்கே-ஆர்சிபி மோதல்

📕📘மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று (மார்ச் 22) திருச்சியில் தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

No comments:

Post a Comment