Wednesday, March 20, 2024

அதிமதுரம் - தினம் ஒரு மூலிகை

 *


*அதிமதுரம்*  என்னும் அருமருந்து மனிதர்களுக்காக இயற்கை உயிர் கொடுத்த மதுர பெட்டகம் குரலில் சிறிதும் பிசுறு இல்லாமல் மதுரமான ஒளியை வழங்க உதவும் அதிமதுரம் பித்த கப நோய்களுக்கான கசப்பில்லா இன் சுவை மருந்து அதிமதுரம் இதை நீரில் இட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு மிளகுத்தூள் சேர்த்து காலையில் பானமாக அருந்த உங்கள் குரலுக்கு குயிலும் அடிமையாகும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பிற்காக இந்த அதிமதுரத்தை பயன்படுத்தினால் சைனஸ் பிரச்சனை ஒற்றை தலைவலி தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில் அதி மதுர தூளை கலந்து பருகலாம் அதிமதுர பொடி சந்தனத்தூள் சமன் கலந்து ஒரு கிராம் அளவாக பாலில் கொடுத்து வர ரத்த வாந்தி நிற்கும் அக உறுப்புகளில் புண் ஆறும் அதிமதுரம் சங்கம் வேர்ப்பட்டை சம அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் அரைத்து ஒரு கிராம் அளவில் மாத்திரையாக்கி வைத்துக் கொண்டு காலை மாலை இரண்டு மாத்திரை பாலில் கொடுத்து வர மஞ்சள் காமாலை தீரும் .

நன்றி.

No comments:

Post a Comment