Saturday, March 16, 2024

செய்தி துளிகள் - 15032024

🍒🍒உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

👉தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு.

👉ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

👉வரும் 28ம் தேதி முதல் ஏப்.29ம் தேதிவரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.

🍒🍒2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு

👉கிராம உதவியாளர்களை நியமிக்க அரசாணை வெளியீடு.

👉3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு

 ‌👉₹11,100 - ₹35,100 என்ற ஊதிய விகிதத்தில் பணியிடங்களை நிரப்பவும் அரசாணை வெளியீடு

👉2022ம் ஆண்டு நிலவரப்படி மாநிலம் முழுவதும் 5,060 பணியிடங்கள் காலியாக உள்ளன.

🍒🍒01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20%இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

🍒🍒அரசு பள்ளிகளில் மின்னணு வகுப்பறைகளுக்கு சென்னை துறைமுகம் ரூ.16 லட்சம் நிதியுதவி.

🍒🍒SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 20.03.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🍒🍒G.O 65 - விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் - அரசாணை வெளியீடு.

🍒🍒எதிர்பாராத விதமாக உயிரிழப்பு / பலத்த காயம் / சிறிய காயம்  ஏற்படும் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு  உரிய நிவாரணம் தாமதமின்றி வழங்க அரசாணை வெளியீடு.

🍒🍒ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி தேதி நீட்டிப்பு

👉1-3 மற்றும் வகுப்பு 4&5 தேதிகளுக்கான CRC ஆன்லைன் பயிற்சி மார்ச் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - மாநில ஒருங்கிணைப்பாளர்.

🍒🍒தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 1196 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

🍒🍒தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது.

🍒🍒“4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது;

மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன;

கடந்த 11 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை;

இந்த முறை உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை  மிகவும் நேர்மையாகவும்,  சமூகநீதியை காக்கும் வகையிலும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”

அன்புமணி ராமதாஸ்

🍒🍒தருமபுரி அருகே மிட்டாரெட்டிஅள்ளி பகுதியில் காணாமல்போன 10 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக  மீட்க்கப்பட்டார்.

👉மன்மதன் – சீதா தம்பதியின் 10 வயது மகன் நேற்று காணாமல் போனது குறித்து இளைஞர் இளங்கோவிடம் போலீஸ் விசாரணை செய்து வந்தது. 

👉இளைஞர் இளங்கோ, சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கிணற்றில் தள்ளிவிட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. 

👉சிறுவனை கொன்று நாடகமாடிய இளங்கோவை கைது செய்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🍒🍒குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

🍒🍒இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரணாக உள்ளது எனவும் மக்களுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணி எனவும் எடப்பாடி பழனிசாமி பேச்சு 

🍒🍒வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் முன்னிலையில் ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

🍒🍒சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என சட்டமன்ற செயலகம் அறிவிப்பு. விரைவில் அமைச்சர் பொறுப்பேற்க முதலமைச்சர் பரிந்துரை

🍒🍒அமைச்சராக பொன்முடி நேற்று பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி டெல்லி பயணம்; 16ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். 

🍒🍒குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது பாரதிய ஜனதா கட்சியின் மோசமான வாக்கு வங்கி அரசியல் - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்

🍒🍒அமெரிக்காவில் சட்டம் படிக்க போகும் சமையல்காரர் மகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு; படிப்பை முடித்துவிட்டு நாட்டிற்கு சேவையாற்ற வரவேண்டும் எனவும் அறிவுரை

🍒🍒குடியுரிமை திருத்தச் சட்டம் என்.ஆர்.சி.யுடன் தொடர்புடையது; அதனால் அதை எதிர்க்கிறோம் - மம்தா பானர்ஜி

🍒🍒ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு வேலைகளில் 50 சதவீத ஒதுக்கீடு.. பெண்களுக்கு வாக்குறுதிகள் தெரிவித்த காங்கிரஸ்

🍒🍒டெல்லி குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்கள் முன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் - ரிஷப் பண்ட்

🍒🍒ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி

🍒🍒இன்று முதல் கோயில்களில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள 48 கோவில்களில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

🍒🍒மீண்டும் 49 ஆயிரம் ரூபாயை கடந்தது,ஒரு சவரன் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

ஒரு கிராம் தங்கம் 6,135 ரூபாய்க்கும், ஒரு சவரன் 49 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை

🍒🍒குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை

இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை

குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை, போதிய அவகாசம் எடுத்து கொள்ளலாம்

சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது

மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன்

 - மத்திய அமைச்சர் அமித்ஷா

🍒🍒ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை குடியரசு தலைவரிடம் நேற்று சமர்பித்தது.

முன்னாள் குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு 191 நாட்கள் நடத்திய ஆய்வின்படி 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தொகுத்து நேற்று சமர்பித்தது.

🍒🍒இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை நியமனம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டது.

🍒🍒மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

🍒🍒நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்

சென்னையில் 102.63 பைசாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல் இனி 100.75 பைசாவிற்கு விற்கப்படும்

🍒🍒ஜப்பான், ஆந்திராவில் நிலநடுக்கம் - அதிர்ச்சி

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

திருப்பதியில் இருந்து 58 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு - இரவு 8.43 மணிக்கு உணரப்பட்டுள்ளது

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

🍒🍒சென்னை அருகே லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.9ஆக பதிவு!

🍒🍒மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த தகவல் அறிந்து மனவருத்தம் அடைந்தேன்

அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🍒🍒வடசென்னையை முக்கியமாக நினைக்கிறது திமுக  

திமுகவை உருவாக்கிய பகுதிகளில் வடசென்னை முக்கிய பங்காற்றுகிறது

சென்னையே நவீனமயமாக்கியதில் திராவிட மாடல் ஆட்சிக்கு பெரும்பங்கு உள்ளது 

வடசென்னையில் 4181 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைத்து 

முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு

🍒🍒100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதிய நிலுவையை விடுவிக்கவேண்டும்.

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

🍒🍒மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் இன்று தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

🍒🍒அக்னி 5: அசத்திய பெண் விஞ்ஞானி.

ஒரே சமயத்தில் பல்வேறு இலக்குகள் மேல் தனித்தனியாகவும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட, அக்னி 5 ஏவுகணையை உருவாக்கிய திவ்யாஸ்திரா திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி ஷீனா ராணி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. 

பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது அக்னி-5 ஏவுகணை. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட அக்னி -5 சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்ததோடு நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமை அளிக்கிறது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

🍒🍒டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய அஷ்வின், 870 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்

மற்றொரு இந்திய வீரரான பும்ரா ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்

ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்

🍒🍒CAA சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது: அமித்ஷா திட்டவட்டம்

'நம் நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை,அதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்'

🍒🍒வாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்!

வாட்ஸ்அப்பில் 3-க்கும் அதிகமான சாட்களை Pin செய்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் அளித்து வருகிறது.

அந்த வகையில், 3க்கும் அதிகமான முக்கிய சாட்களை Pin செய்யும் வசதி தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப்பில் தற்போது 3 சாட்களை மட்டுமே Pin செய்ய முடியும்.   

 🍒🍒நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொய் தகவல்கள் பரவுவதைத் தடுக்க கூகுள் நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்.

ஏ.ஐ மூலமாக Deepfake மற்றும் பொய்யான தகவல் மூலமாக மக்களை திசை திருப்புவதை தடுக்க உறுதி பூண்டுள்ளதாக கூகுள் அறிவிப்பு

🍒🍒பாஜக தலைமையிலான அணியால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை 

40 தொகுதிகளிலும் நாங்கள் வெல்வோம்

இரட்டை இலை சின்த்தில் நிற்போம் என ஓ.பி.எஸ் கூறுவது விரக்தியின் விளிம்பில் அவர் உள்ளதை காட்டுகிறது

இபிஎஸ்

🍒🍒உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா; ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

🍒🍒இணைய வழி பயணசீட்டை ரத்து செய்தால், ஒரு மணி நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு: இந்திய ரயில்வேயின் புதிய திட்டம்

🍒🍒சென்னையை தலைசிறந்த நகரமாக்க உத்தரவிட்டுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🍒🍒தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 2,83,34,462 சுற்றுலா பயணிகள் வருகை வந்துந்துள்ளனர்: சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

🍒🍒இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர் காலமானார்.

இரும்பு நுரையீரல் உதவியுடன் 70 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர் (78) காலமானார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த அவர் 6 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால் கழுத்துக்கு கீழ்ப்பகுதி முழுமையாக செயலிழந்தது.

எப்படியாவது மற்றவர்களை போல் வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் போராடி வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment