Tuesday, March 26, 2024

பிரிட்ஜ் அதிகமா கரண்ட் எடுக்காம இருக்க சூப்பர் ஐடியா

பிரிட்ஜ் பயன்படுத்தும் முறையும் பராமரிப்பு முறையும் பிரிட்ஜ் நம் பொருட்களை அதிக அளவில் அடக்கி வைப்பதின் தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் பிரிட்ஜில் மற்ற பொருட்களை வைக்க கூட இடம் இல்லாததற்கு பொருட்களை வைத்திருப்பார்கள். அப்படி வைத்து அது மட்டும் இதில் வைக்கும் பொருட்களை திறந்த நிலையில் வைத்து அனைத்தையும் மூடி போட்டு தான் வைக்க வேண்டும். - 

அதே போல் பிரிட்ஜில் அடிக்கடி திறந்து மூடவும் கூடாது. இதனால் குளிர்ந்த காற்று வெளியேறி வெப்ப காற்று உள்ளே செல்வதால் அதிக அளவில் மின்சாரம் செலவாகும். ஒருமுறை பிரிட்ஜை திறக்கும் போதே தேவையான அனைத்தையும் எடுத்து பயன்படுத்த பழகுங்கள். இது அனைத்திலும் விட பிரிட்ஜில் ஃப்ரீசரில் ஐஸ் கட்டி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐஸ்கட்டி அதிக அளவில் சேர்ந்து கொள்வதாலும் மின்சாரம் அதிகமாக செலவாகும். அதுமட்டுமின்றி பிரிட்ஜ் சீக்கிரம் பழுதாகி விடும். அதை சரி செய்ய ஒரு சுலபமான டிப்ஸ் .

அதற்கு முதலில் ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் டீ வடிக்கட்டும் பில்டரை வைத்து அதில் சால்ட் உப்பை தூவி விடுங்கள். இதை தட்டுடன் நேரடியாக ப்ரீசர் பாக்ஸ் உள்ளே எடுத்துச் சென்று இப்போது பில்டரை மட்டும் எடுத்து அதில் இருக்கும் சால்ட் ஃப்ரீசருக்குள்ளாக தூவி விடுங்கள். இதனால் ஐஸ் கட்டிகள் சேராது அதே சமயத்தில் மின்சாரமும் குறைவாக செலவாகும். இதை கையிலே தூவலாமே எதற்கு பில்டர் என கேட்கலாம். பில்டரை கொண்டு தூவும் போது உப்பு எல்லா இடத்திலும் பரவலாக பரவும். அப்படி மில்லாமல் போனால் உப்பு ஒரே இடத்தில் கொட்டி இது மற்ற இடங்களுக்கு பரவாமல் போய் விடும்.

அதுமட்டுமின்றி பிரிட்ஜை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும். அந்த சமயத்தில் உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் வெளியில் எடுத்து வைத்த பிறகு தான் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தாமல் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை காட்டன் துணியில் நனைத்து நன்றாக பிழிந்து அதை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

மேற்சொன்ன முறைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் பொழுது பிரிட்ஜ் அதிக நாள் உழைப்பதுடன், மின்சார செலவும் குறைவாக ஆகும். நமக்கும் பிரிட்ஜை அடிக்கடி பராமரிக்க வேண்டிய செலவு இருக்காது. இந்த குறிப்புகள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால் நீங்களும் இதை பயன்படுத்தி பலன் அடையலாம்.

No comments:

Post a Comment