Tuesday, March 26, 2024

வயதானால் என்ன?வாழவே முடியாதா?

வயதாகிப் போனதால் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பலரும் கேட்கும் கேள்வி, நாங்கள் என்ன வாழத் தகுதி அற்றவர்களா? என்று தான். 

ஏன் அவர்களுக்கு இந்தக் கேள்வி எழுகிறது என்று சிந்தித்தால்,

அவர்களை வீட்டிலே உள்ளவர்களே முதலில் மதிப்பதில்லை. 

அவர்களை "தேவையற்ற சுமை" என்று தான் நினைக்கிறார்கள். 

வயதானவர்களே

வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்காமல், நீங்களே வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

சேவை செய்ய நீங்கள் விரும்பினால் அதற்குரிய நிறுவனங்களுக்குச் சென்று

தொண்டாற்றுங்கள், அல்லது

அருகிலுள்ள திருக்கோவிலுக்குச் சென்று தொண்டாற்றுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உற்ற துணையாக நின்று உதவுங்கள். 

இலவசமாக குழந்தைகளுக்கு பாடங்களைச்

சொல்லிக் கொடுங்கள். 

உங்களை முழுமையாக மற்ற சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். 

சற்று யோசித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றிச் சேவை செய்ய எத்தனையோ வாய்ப்புகள் உள்ளதை உணர முடியும். 

மகிழ்வோடு வாழுங்கள்.


🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

No comments:

Post a Comment