Tuesday, March 26, 2024

வங்கி பணப்பரிமாற்றத்தில் NEFT, RTGS , IMPS

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஆன்லைன்(Internet Banking) மூலமாக பணத்தை Transfer செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் Transfer செய்கிறார். வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் Transfer செய்துகொள்ளும் வசதியினை வங்கிகள் வழங்குகின்றன. ஒரு வங்கிக்கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பணத்தை மாற்றும்போது, வங்கிகள் பல்வேறு காரணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு விதமான தேர்வுகளை(Option) வழங்குகிறது. தற்போது வங்கிகள் National Electronic Fund Transfer (NEFT), Real Time Gross Settlement (RTGS), Immediate Payment Service (IMPS) போன்ற Transaction Type-களை வழங்குகிறது. பண பரிவர்த்தனையின் மதிப்பு, பரிமாற்றத்தின் வேகம், சேவை வழங்கும் நேரம் மற்றும் பிற காரணிகளைக்கொண்டு Transaction-னின் வகைகள் மாறுபடுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பொருத்தமுள்ள பண பரிமாற்ற வகைகளின் மூலம் பணத்தை பரிமாற்றிக்கொள்கிறார்கள். மேலும் அனைத்து வங்கிகளும் நிதி பரிமாற்றத்தை எளிமைப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு சொந்த டிஜிட்டல் பணப்பைகள் (Digital Wallets) வழங்குகின்றன.

National Electronic Fund Transfer (NEFT)

NEFT வகை பண பரிமாற்றமானது மின்னணு முறையில் ஒரு வங்கியில் அல்லது வங்கிக்கணக்கிலிருந்து, வேறு எந்த ஒரு வங்கிக்கணக்கிற்கும் பணத்தை Transfer செய்ய முடியும். இம்முறையில் பரிவர்த்தனையானது ஒரு நாளைக்கு 12 Batch-களாக நடைபெறுகிறது. அதாவது காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அரைமணி நேரத்திற்கு ஒரு Batch வீதம் மொத்தம் 12 Batch-களாக பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் 8 மணி முதல் 1 மணி வரை 6 Batch-களாக நடைபெறுகிறது.ஞாயிற்று கிழமைகளிலும் மற்றும் மற்ற விடுமுறைநாட்களிலும் பரிவர்த்தனை நடைபெறாது.

இம்முறையில் ஒரு வங்கிக்கணக்கிற்கு பணத்தை பரிவர்த்தனை செய்யும்போது, அந்த பரிவர்த்தனையை குறிப்பிட்ட நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை Schedule-ஆக தேர்ந்தெடுக்க முடியும். எடுத்துக்காட்டாக, 07-02-2019 அன்று நீங்கள் ஒரு பயனாளருக்கு பணத்தை Transfer செய்யும்போது, அந்த Transfer ஆனது 15-02-2019 அன்று Transfer ஆகுமாறு Set செய்யலாம். அவ்வாறு நீங்கள் Set செய்தவுடன் அந்த நாள் வரும்போது தானாகவே நீங்கள் Set செய்த பணமானது அந்த நபருக்கு Transfer ஆகும். இந்த NEFT முறையில் தான் PF பணம் மற்றும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குதல் போன்றவை செலுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க Difference Between NEFT, RTGS & IMPS Transfer -Tamil

No comments:

Post a Comment