Thursday, March 21, 2024

செய்தி துளிகள் - 18.03.2024(திங்கட்கிழமை)

🌅🌅பள்ளிகளுக்கு இரண்டாம் கட்ட மானியம் வழங்குவதில் தாமதம் - உடனே வழங்க ஹெச்.எம்.,கள் வலியுறுத்தல்

(நாளிதழ் செய்தி)

🌅🌅அடுத்த 3 ஆண்டுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழிகாட்டு பயிற்சி: சென்னை ஐஐடி திட்டம்.

🌅🌅ஏப்.22க்கு பிறகு 1-9ம் வகுப்பு தேர்வுகள் - கல்வித்துறை ஆலோசனை

(நாளிதழ் செய்தி)

🌅🌅வணிகவியல், வரலாறு பாடப்பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக மூன்றாம் பாடப்பிரிவு (3rd Group) உருவாக்குதல் -  முதற்கட்டமாக 20 பள்ளிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.

🌅🌅பதிவறை எழுத்தர்- ஆய்வக உதவியாளர் ஓட்டுநர் பதவிகளுக்கு 01.12.2023 முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்திட அறிவுறுத்துதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி) செயல்முறைகள் வெளியீடு.

🌅🌅SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 20.03.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🌅🌅சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு DNC / DNT என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் உத்தரவு.

🌅🌅ஜூன் 3-ல் ஸ்லெட் தகுதித் தேர்வு அறிவிப்பு

🌅🌅முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - பிறப்புச் சான்றிதழ் இல்லையெனில், பள்ளிகளில் சேர்க்கைக்காக குழந்தையின் வயதுக்கான சான்றாகக் கருதப்படும் ஆவணங்கள் - அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 வெளியீடு.

🌅🌅தேசிய கல்விக் கொள்கை பின்பற்றியே 

 ஸ்ரீ பள்ளி

இது கல்வியை காவி மயமாக்கும் முயற்சி

தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

🌅🌅ஜீன்ஸ், டி–சர்ட் அணியக்கூடாது; ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு

பள்ளி ஆசிரியர்கள், உடையில் கவனத்துடன் இருக்க வேண்டும்; ஜீன்ஸ், டி–சர்ட் அணியக்கூடாது. ஆசிரியைகள் சல்வார் அல்லது சுரிதார், குர்தா, துப்பட்டா அல்லது சேலை அணியலாம் என்று மஹாராஷ்டிரா கல்வித்துறை உத்தரவு

🌅🌅ராகுல்காந்தியின் 'நியாய சங்கல்ப் பாதயாத்ரா' என்ற பெயரில் நடைபெற்ற யாத்திரை நிறைவு.

மும்பையில் மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை இறுதி நடைபயணம் 

நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

🌅🌅CSK வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

🌅🌅ஒரே நாடு, ஒரே தேர்தலை முயற்சிப்பதற்கு முன்பாக ஒரே கட்டத்தில் ஒரு தேர்தலை நடத்த நாம் ஏன் முயலக்கூடாது - கமல்ஹாசன் கேள்வி

🌅🌅தேர்தல் நடத்தை விதிகள் 

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. 

இது போன்று 702 நிலையான கண்காணிப்பு குழுவினரும்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

🌅🌅அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-க்கு பதிலாக ஜூன் 2-ம் தேதி நடைபெறும்

-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🌅🌅மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம்  தெரிவிக்கலாம்.

1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்.

🌅🌅அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று ஆலோசனை.

தேர்தல் நடத்தை விதிகள், வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளார்.

🌅🌅எங்களது 3-வது ஆட்சிக் காலத்தில், நாட்டுக்கு மேலும் பல பெரிய முடிவுகளை எடுப்போம்

-ஆந்திராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

🌅🌅பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு

பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார்.

🌅🌅"இந்திய நீதிப்பயணத்தை முடக்க மத்திய அரசின் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன

நாம் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகத்தான போராடுகிறோம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அது உண்மையல்ல

இந்து தர்மத்தில் ஒரு அதிகார மையம் உள்ளது, அதற்கு எதிராகத்தான் நாம் போராடுகிறோம்"

-இந்திய ஒற்றுமை நீதிப் பயண நிறைவுவிழாவில் காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி 

🌅🌅இன்று பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

🌅🌅வேலையில்லாத் திண்டாட்டம், 

👉பணவீக்கம், 

👉விவசாயிகளின் போராட்டங்கள்

போன்றவற்றை ஊடகங்கள் பேசாமல் புறக்கணித்து வருகின்றன

அதனால் தான், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ தூரம் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டேன்

-மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு

🌅🌅காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் உள்ளிட்டோருக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளோம்

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அதில் அடங்கும்

ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம்.

-இந்திய ஒற்றுமை நீதிப் பயண நிறைவுவிழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு                                                                                   🌅🌅தேர்தல் பத்திரங்கள் - புதிய தரவுகள் வெளியீடு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடு

யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகள் பெறப்பெற்றது என்ற தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

🌅🌅துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு.

சென்னையில் உரிமம் பெற்ற 2,125 துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து காவல்துறை அதிரடி உத்தரவு.

🌅🌅தேர்தல் அல்ல கொள்கை யுத்தம் 

"நடைபெற உள்ளது சாதாரண தேர்தல் அல்ல, கொள்கை யுத்தம், பாசிச சக்திகளுக்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் போர்"

நாட்டின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி  

விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

🌅🌅சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை

👉சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் தென்பட்டதால் மருத்துவர்கள் ஆச்சர்யம்

👉Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து இருப்பதால் அதை நீக்க முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டம்.

🌅🌅தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட்

தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட், அறைகள் வசதி செய்து தரப்படும்.

நேரில் வரும் தகுதி வாய்ந்த பக்தர்கள் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் தரிசன டிக்கெட்.

தேர்தல் விதிமுறை அமலால் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களின் பேரில் ஒதுக்கீடு செய்ய இயலாது.

விஐபி பிரேக் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய இயலாது 

திருப்பதி தேவஸ்தானம்

🌅🌅சனிக்கிழமை  பணி ஓய்வு,நேற்று ஞாயிற்றுக்கிழமை  பாஜகவில் ஐக்கியம்

புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி. சந்திரன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து,பாஜகவில் இணைந்தார்

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வ கணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐ.ஜி. சந்திரன்.

🌅🌅இன்று கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது;

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை விட பிரதமர் மோடி அளித்த நிதியே அதிகம்”

வானதி சீனிவாசன்.

🌅🌅குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர் விவரங்களை கட்சிகள் நாளிதழ்களில் வெளியிட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தகுதியானவர்களை குடிமக்கள் தேர்வு செய்ய வேண்டும்

தேர்தல் ஆணையம்

🌅🌅வருகிற ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும்: 

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி

🌅🌅ஓட்டளிக்க 12 அடையாள அட்டைகள்

👉ஆதார் அட்டை

👉வேலை உறுதித் திட்ட அட்டை

👉புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகம்

👉ஓட்டுனர் உரிமம்

👉பான் கார்டு

👉என்.பி.ஆர்., அடையாள அட்டை

👉பாஸ்போர்ட்

புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்

👉மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான அடையாள அட்டை

👉எம்.பி., எம்.எல்.ஏ., மேலவை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை

👉சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையால் அளிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.

🌅🌅சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி கட்டாயமாக்கி உள்ளது.

அதன்படி, ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடையேயான இடைவெளி 60 விநாடிகளுக்கு மிகக் கூடாது, இதை 2 முறை மீறினால் பேட்டிங் செய்யும் எதிரணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும்.                                                     🌅🌅குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில பிரிவினருக்கு சாதகமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகி உள்ளதாக மனுவில் கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹பணமும் சேமிப்பும்

👉தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) முதலீடு.!

நிலையான வருமான முதலீட்டுத் திட்டத்தில் (NSC) தேசிய சேமிப்புச் சான்றிதழும் அடங்கும்.தபால் அலுவலகங்களின் மூலம் தொடங்கும் இந்த இந்திய அரசு சார்ந்த திட்டத்தில், சிறிய மற்றும் நடுத்தர வருமான பெரும் நபர்கள் முதலீடு செய்யலாம். 

தனிப்பட்ட இந்திய குடியிருப்பாளர்களுக்கு மட்டும் பயன்பெற உதவும் திட்டமாகும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) NSC முதலீடு செய்ய அனுமதி இல்லை.இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். (பாதுகாப்பான முதலீடு)தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) முதலீட்டு திட்டத்தில் (ஒரு சிறியவர்/ஒரு பெரியவர்) கூட்டுக் கணக்கு முறையிலும் முதலீடு செய்யலாம். வரி சேமிப்பில் நிலையான வட்டியைப் பெற விரும்பும் அனைவரும் இதில் (NSC) முதலீடு செய்யலாம்.NSC முதலீட்டில் வட்டி மற்றும் முழுமையான மூலதனம் கிடைக்கும்.

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹ரயில்வே அமைச்சகத்தில் உள்ள காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

👉தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு

 rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

👉தற்போது இங்கு டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) 1092, டெக்னீசியன் கிரேடு III 8052 என மொத்தம் 9,144 இடங்கள் உள்ளன. இதில் ஆர்.ஆர்.பி., சென்னைக்கு 833 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

👉ரயில்வே பணி இடங்களுக்கான கல்வித்தகுதி: டெக்னீசியன் (சிக்னல்) பதவிக்கு பி.எஸ்சி.,/ டிப்ளமோ / பி.இ படிப்புகளும், மற்ற பதவிக்கு ஐ.டி.ஐ.யும் முடித்திருக்க வேண்டும்.

👉ரயில்வே பணி இடங்களுக்கான வயதுவிவரம்: 1.7.2024 அடிப்படையில் சிக்னல் பதவிக்கு 18 - 36, டெக்னீசியன் பதவிக்கு 18 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

👉தேர்ச்சி முறை: ரயில்வே பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

👉விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

👉விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 250 செலுத்தினாலே போதுமானது.

👉கடைசிநாள்: வரும் 8.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

👉இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு

 rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

No comments:

Post a Comment