Wednesday, March 20, 2024

சிந்தனை துளிகள் - 19.03.2024(செவ்வாய்க்கிழமை)

எந்த இடங்களில் நம் வார்த்தைகளுக்கு 

மதிப்புக் குறைகிறதோ அங்கிருந்து நாமாகவே ஒதுங்கிக் கொள்வதே நமக்கு மரியாதையாகும்.!


அவமானத்தை எப்போதும் அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்,ஏனெனில் நம்மை அவமானப்படுத்த ஒருவர் இல்லையென்றால் நமக்கு தன்மானமென்ற ஒன்று இருப்பதே இன்றுவரை நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.!!


நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் இரு தவறுகள்...

👉பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பது;

👉மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘பொறியியல் மாணவர் சேர்க்கை -முக்கிய முடிவு

பொறியியல் படிப்புக்கு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் வழியிலான பதிவு துவக்கம்

ஆன்லைன் வழியில் விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மாதம் வரை கால அவகாசம் வழங்க திட்டம்

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முடிவு

📕📘துவக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு நிலைக்கு ரூபாய் 5400 தர ஊதியம் பெரும் நிலையில் அவரே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நேர்வில் ஊதிய நிர்ணயம் குறித்து அரசு விளக்கக் கடிதம்

👉இக்கடிதத்தின் அடிப்படையில் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் 31.05.2006 க்கு முன்னர் தேர்வு நிலை ஊதியம் ₹5400 வழங்கியது சரியானது என்றும், அவரே நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் போது தர ஊதியம் ₹ 4700 நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

📕📘1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு - வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை - Director Proceedings வெளியீடு.

📕📘IFHRMS - TPF சந்தா தொகை ஆண்டிற்கு ரூ.5,00,000க்கு மிகக் கூடாது.

👉ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்ளின் காணொளி கூட்டத்தின் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டதின்படி அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF பணியாளர்களின் மாதாந்திர ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்யப்படும் GPF/TPF Subscription தொகை ரூ .41500 / -க்கு மிகாமலும் , ஆண்டிற்கு ரூ .500000 / - லட்சம் மிகாமலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

👉மேலே உறுதி செய்து பட்டியலினை சமர்பிக்கும்படி குறிப்பிட்ட தொகைக்கு மேல் பிடித்தம் செய்யப்படும் நேர்வில் பிடித்தம் செய்யப்பட்ட மிகை தொகையானது தொடர்புடைய GPF/TPF பணியாளரின் வருடாந்திர Account Slip -ல் வரவு வைப்பதிற்கு பதிலாக Suspense Account- ல் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கலாகிறது.

📕📘2024-2025 ஆம் ஆண்டுக்கு உரிய வருமானவரியை களஞ்சியம் (IFHRMS) இல் மார்ச் மாதத்திற்கு தானாகவே பிடித்தம் செய்திட வில்லை!!

அடுத்த மாதம் (ஏப்ரல் ) வருமானவரியை கணக்கீடு செய்து தானாகவே பிடித்தம் செய்திடும் என்பதை அறியவும்.!

📘📕புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்குமே ஏற்காது, PM SHRI SCHOOLS திட்டம் என்பது வேறு - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

📕📘மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களை மீண்டும் தாய் பள்ளிக்கு திரும்ப உத்தரவு

📕📘கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உதவும் 'ஸ்லெட்' தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்படும் என நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

📕📘ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது - நாளிதழ் செய்தி 

📕📘அடுத்த 3 ஆண்டுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழிகாட்டு பயிற்சி : சென்னை ஐஐடி திட்டம்

📕📘இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் மார்ச் 20 வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.                                                                📕📘அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்கள்: பணிநிரவல் செய்ய பள்ளிக் கல்வித் துறை அனுமதி

📕📘சென்னை சேப்பாக்கத்தில் 22ம்தேதி சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது.

📕📘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

📕📘பீகாரில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என ஐக்கிய ஜனதாதள தலைவர் காலித் அன்வன் தெரிவித்துள்ளார்.

📕📘டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. 

📕📘சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து. 

📕📘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, இந்த சீசனில் கேப்டன் கூல் எம்.எஸ்.தோனி கேப்டனாக இருக்க மாட்டார் என தெரிவித்தார். 

📕📘வாய்ப்புகளை வழங்கிய மகேந்திர சிங் தோனிக்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என அஸ்வின் தெரிவித்தார்.

📕📘திருவாரூரில் பிரசாரத்தை துவங்குகிறார் முதல்வர்

👉திருவாரூரில் 23ம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்குவதாக தகவல்

📕📘மக்களவைத் தேர்தல்: 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நிறைவு 

9.12.2023க்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் 5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

📕📘திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவிப்பு.

📕📘திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோவிற்கு மாலை அணிவித்து மதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  

📕📘மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை வரும் 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

👉முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.

📕📘திருச்சி மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார்.

பம்பரம் சின்னம் அல்லது தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனிச்சின்னத்தில் துரை வைகோ போட்டியிடுவார்”

வைகோ

📕📘பிரபல சொகுசு கார் நிறுவனமான Lexus, தனது LM 350h ரக கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

7 இருக்கைகளைக் கொண்ட காரின் விலை ₹2 கோடியாகவும், 4 இருக்கைகள் கொண்ட கார் ₹2.5 கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

48 இன்ச் டிவி, 23 ஸ்பீக்கர் சிஸ்டம், அதி நவீன வசதி கொண்ட இருக்கை, குளிர்சாதன பெட்டி என சகல வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

📕📘மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்: தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டமன்ற தொகுதிக்கு ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்

📕📘மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழ்நாடு அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்.

📕📘சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.48,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.6,090-க்கு விற்பனையாகிறது. 

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்பனையாகிறது.

📕📘ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி மனு தாக்கல்

📕📘முதல் ஆளாக கூட்டணிக்கான இடங்களை உறுதி செய்தது திமுக

மக்களவைத் தேர்தலுக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையான தொகுதி பங்கீடு நிறைவு

21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது திராவிட முன்னேற்ற கழகம்

கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது திமுக

📕📘பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

📕📘ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை கடிதம்

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம்

📕📘மீண்டும் ரஷ்யாவின் அதிபராக தேர்வானார், விளாடிமிர் புதின்

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹பழைய சாதத்தில் கிடைக்கும் நன்மைகள்:-

👉பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு.

👉வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு பழமையான உணவுத்தான் நீராகாரம். நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமாய் அழைக்கப்படும் பழைய சோற்றுக்கு இணையான எளிய உணவு ஒன்றை இவ்வுலகில் எவராலும் காட்ட இயலாது. 

 👉பழைய சோற்றைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடுவதுதான் கேடு பயக்கும். மாறாக, மீதியுள்ள சோற்றில் நல்ல நீரை ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தைத் தேவையான அளவு நறுக்கிப் போட்டு மூடிவைத்துவிட வேண்டும்.மறுநாள் காலை அச்சோற்றை நீருடன் சேர்த்து சாப்பிட்டு வெங்காயத்தையும் இடையிடையே மென்று உண்டால் அதுதான் அற்புத உணவாகிறது.

 👉இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் உண்டு. இரவு முழுக்க நீருடன் சோறு ஊறும்போது, அதில் நுண் உயிரிகள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) கோடிக்கணக்கில் பெருகுகிறது. அதனோடு வைட்டமின் பி6, பி12 போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. பழைய சாதம் புளித்து நொதிக்கும்போது இந்த விளைவுகள் உண்டாகின்றன.

👉சாதாரண தானியங்கள், பருப்புகளைவிட முளைகட்டிய பின் அவை பலமடங்கு சக்தியும், சத்தும் மிக்கனவாய் மாறுவது போலவே, பழைய சோறு நீரில் நொதிக்கும்போது அதன் பயன் பன்மடங்கு உயருகிறது.

👉காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும் உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.

No comments:

Post a Comment