Thursday, March 21, 2024

அறிவால் மனை பூண்டு - தினம் ஒரு மூலிகை


*அறிவால் மனை பூண்டு.* கூர்முனி பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிக குறுஞ்செடி மழைக்காலங்களில் சாலை ஓரங்களில் தானே வளரும் இலையே மருத்துவ பயன் உடையது இரத்தக் கசிவை தடுக்கும் மருந்தாக பயன்படுகிறது இலையை கசக்கி வெட்டுக் காயத்தில் பற்றிட ரத்தப்போக்கு நிற்கும் இலையுடன் சம அளவு குப்பைமேனி இலை பூண்டு இரண்டு பல் மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னகை அளவு உள்ளுக்கு கொடுத்து காயத்திலும் பூச அவை குணமாகும் உப்பு புளி நீக்க வேண்டும் அறிவால்மனை பூண்டு இலை பொடியை 10 கிராம் எடுத்து நூறு மில்லி நீரில் கொதிக்க வைத்து இருவது மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை மட்டும் அருந்தி வர மூக்கு வாய் மற்றும் உடலில் ஏற்படும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் அரிவாள்மனை பூண்டின் வேர் விதை இவைகளை கலந்து பொடி செய்து சர்க்கரை உடன் சேர்த்து தினம் மூன்று வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சல் குணமாகும் அறிவாள்மனை பூண்டின் அற்புத மருத்துவ குணங்கள் ஆகும்.

நன்றி.

No comments:

Post a Comment