Tuesday, March 26, 2024

பண வீக்கம் ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள் எவை?

பணவீக்கம் என்றால் என்னவென்று நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஆங்கிலத்தில் இன்ஃப்லேஷன் என்பார்கள்.

ஒரு பொருளை நாம் தொடர்ச்சியாக வாங்கிக் கொண்டிருக்கிறோம்,அந்த பொருளின் விலை திடீரென்று உயர்ந்தால், அதை வாங்கும் சக்தி நமக்கு அதிகரிக்காது. நம்மிடம் இருக்கும் பணம் அப்படியே தான் இருக்கும், ஆனால் வாங்கும் பொருளுக்கு அதிக பணம் கொடுக்க வேண்டும்.

இதற்கு சரியான உதாரணம் என்றால் தற்போது நிலவி வரும் வெங்காய விலை ஏற்றத்தை சொல்லலாம். போன மாதம் வரை வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ 30 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மாதம் 10 கிலோ வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் வெங்காயத்திற்கு செய்யும் செலவு 300 ரூபாய். தற்போது வெங்காயத்தின் விலை 80 ரூபாய். நீங்கள் தற்போதும் வெங்காயம் வாங்கியே தீர வேண்டும். இப்போது நீங்கள் 10 கிலோவிற்கு கொடுக்கும் விலை 800 ரூபாய். நீங்கள் அதிகமாக செலவு செய்த 500 ரூபாயை உங்களுக்கு நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் கொடுக்கப் போவதில்லை. ஒரே பொருள், ஒரே அளவு, ஆனால் அதற்கு நீங்கள் இந்த மாதம் 500 ரூபாய் அதிகமாக செலவு செய்து வாங்க வேண்டும். இதைத்தான் பணவீக்கம் என்பர். பணத்தின் மதிப்பு குறைகிறது என்பர்.

இந்த பணவீக்கத்தை, மற்றும் அதற்கான காரணங்களை பார்ப்போம்.

1) பொருளின் இருப்பு குறைவு, தேவை அதிகம். இதனை ஆங்கிலத்தில்Demand is more than supply என்பர். மேலே சொன்ன வெங்காயம் இதற்கு ஒரு சரியான உதாரணம். சில சமயம் தேவையைவிட, சிறு அளவே உற்பத்தி குறைந்தாலும், மொத்தமாக வெங்காயம் வாங்கி விற்கும் வியாபாரிகள் அதை பதுக்கி வைத்துவிட்டு அதற்கு ஒரு பெரிய செயற்கை தேவையை உருவாக்கிவிட்டு, அதிகமான லாபத்திற்கு விற்று விடுவார்கள்

2) அடுத்தபடியாக நாம் பார்க்கப்போவது இன்னொரு விதமான பணவீக்கம். இங்கே பொருட்களின் உற்பத்தி கூடவும் இல்லை குறையவும் இல்லை ஆனால் விலை ஏறுகிறது காரணம் அந்த பொருளின் தேவை அதிகரிப்பதால். உதாரணத்திற்கு முழம் 10 ரூபாய்க்கு விற்கும் சாமந்தி, பிள்ளையார் சதுர்த்தி,சரஸ்வதி பூஜை, போன்ற காலங்களில் ஒரு முழம் 50 ரூபாய்க்கு போகும்.

அதிகமான வரிவிதிப்பு காரணமாகசில பொருட்களின் விலை ஏறும். அதேபோல ஒரு பொருளுக்கு உற்பத்தி மற்றும் தேவை சரிசமமாக இருப்பினும் விலை அதிகரிக்கும்! காரணம்,தேவை நிரந்தரமாக இருப்பதினால்! ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தும் மருந்துகள் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விலை அதிகரிக்கும். ஏனென்றால் மருந்துகள் நமக்கு அத்தியாவசிய தேவையாகும். இதுவும் ஒருவிதமான எக்ஸ்பிளோய்டேஷன் based inflation.

ஜப்பான் போன்ற நாடுகள் இதற்கு நேரெதிர்!, அங்கே Deflation. பொருட்களின் விலை ஏறவும் ஏறாது, இறங்கும் இறங்காது, சம்பளம் உயராது, எல்லாம் அன்று இருந்தது போலவே, இன்றும் இருக்கும். ஜப்பான் வங்கிகளில் நீங்கள் உங்கள் பணத்தை போ ட, அவர்களுக்கு, நீங்கள் வட்டி கொடுக்க வேண்டும்.

தீபாவளி போன்ற சமயங்களில் ஜனங்களிடம் போனஸ் போன்ற தொகையினால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அப்பொழுதும் பொருட்களின் விலை ஏறும். இப்படி எல்லாம் எண்ணற்ற காரணங்களை சொல்லலாம் இப்பதிவை நான் ஒரு சிறுகதை உடன் முடித்துக்கொள்கிறேன்.

பொருளாதாரம் படித்த மாணவர்கள் இதை படித்திருப்பார்கள் இதற்கு வாட்டர் டைமண்ட்paradox என்று கூறுவார்கள். ஒரு பெரும் பணக்காரன் தன்னிடம் இருக்கும் பணம் வைரம் வைடூரிய த்துடன் ஒரு பாலைவனத்தில் தனி ஒருவனாக விமானத்தில் பறக்கிறார். விமானம் விபத்துக்குள்ளாகியது இவர் பிழைத்துவிடுகிறார் தன்னுடைய பணம், தங்கம், வைரத்துடன்,சுற்றி முற்றும் பார்த்தால் யாரும் இல்லை. இவர் தன் பணம், வைரம், தங்கம், உள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்து செல்கிறார், தாகம் வரட்டுகிறது, வெயிலில் இவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்போது அவர் அருகே ஒருவன் ஒரு பானையில் நீருடன் வருகிறான். அவனைப் பார்த்து இவர் நீர் கேட்கிறார்,அவன் கொடுக்க மறுக்கிறான், இவர் தான் அணிந்திருந்தஒரு தங்க மோதிரத்தை கழட்டி அவரிடம் கொடுக்கிறார்,அப்போதும் அவன் தண்ணீர் தரமறுக்கிறான். பணம், மற்றும் வைரத்தை, கொடுக்கிறார் அப்போதும் அவன் மறுக்கிறான் கடைசியில் தன்னிடமிருந்த பணம், வைரம், தங்கத்தை எல்லாம் கொடுத்து சிறிதளவு குடிநீர் அவனிடம் வாங்கிக் கொள்கிறார். இந்த இடத்தில் பணம்,மற்றும் தங்கம், வைரம்,இதற்கு மதிப்பில்லை தண்ணீருக்கு மதிப்பு. அவர் உயிர் பிழைத்தால் இழந்த அனைத்தையும் சம்பாதிக்க முடியும் ஆனால் உயிர் போய்விட்டால் அந்த வைரமும் தங்கமும் எதற்கு உபயோகப்படும்!அதனால அனைத்தையும்கொடுத்துவிட்டு சிறிதளவு தண்ணீர் வாங்கிக் கொள்கிறார். பணம் இவ்வாறு தேவைக்கேற்ப அதன் சக்தியை இழக்கும், அதன் சக்தியை அதிகமாக்கிக் கொள்ளும்.

No comments:

Post a Comment