Saturday, March 16, 2024

ஆவாரை - தினம் ஒரு மூலிகை

  


*ஆவாரை*.  தாவரவியல் பெயர்,Cassia Aunculata ஆவாரைக் கண்டோர் சாவாரை கண்டதுண்டோ இலை பட்டை பூ வேர் பிசின் என தனது முழு உடலையும் மருத்துவ தானமாக அளிக்கும் ஆவாரை இருக்கும்போது நோய்களை கண்டு அஞ்ச வேண்டியது இல்லை வறண்ட நிலத்திலும் குதூலத்துடன் மஞ்சள் நிற பூக்களுடன் வளரும் குறுஞ்செடி ஆவாரை மண்ணிலிருந்து முளைத்தெழும் சொக்கத்தங்கம் ஆவாரை இலைகளுக்கு கல்லீரலை பாதுகாக்கும் தன்மை உண்டு சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் சிறந்த மூலிகை ஆவாரை இதன் இலை வேர் பூ காய் பட்டை ஆகியவற்றை உலர வைத்து தயாரித்த சூரணத்தை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்து வர நீரிழிவு நோயின் தீவிரம் குறையும் அதிகமாக சிறுநீர் கழித்தல் நாவறட்சி உடல் சோர்வு முதல் என கட்டுக்குள் வரும் பசுமையான ஆவாரம் பூக்களை மூன்று தேக்கரண்டி எடுத்து நீரிலிட்டு நன்றாக கொதிக்க வைத்து சுவைக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து வாரத்தில் மூன்று நாட்கள் குடிக்கலாம் துவர்ப்பு இனிப்பு சுவையுடன் கூடிய இந்த பானம் கை கால்களில் உண்டாகும் எரிச்சலை குறைக்க உதவும் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து சிறுநீர் எரிச்சலை குறைக்கும் .

உடலுக்கு பலத்தை கொடுக்க ஆவாரம் பூக்களை பாசிப்பயிறு சேர்த்து சமைத்து நெய் கூட்டி சாதத்தில் பிசைந்து அவ்வப்போது சாப்பிட்டு வரலாம் ஆவாரை குடிநீர் சிறந்த எடுத்துக்காட்டு ஆவார இலைகள் மருதம் பட்டை கொன்றை வேர் ஆகியவற்றை அரைத்து மோரில் கலந்து குடிப்பது நீரிழிவுக்கான மருந்து இதன் பூவை துவையலாகவோ குடிநீராகவோ பயன்படுத்த உடலில் தோன்றும் வியர்வை நாற்றம் உடலில் தங்கிய அதி வெப்பம் மறையும் ஆவாரம் பூ அதன் பட்டையை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும் துவர்ப்பு சுவையுடைய ஆவாரை பூக்கள் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக ரத்தப்போக்கு மருந்தாகிறது மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலிக்கு ஆவாரை மலர் மொட்டுக்களை குடிநீரில் இட்டு பயன்படுத்தும் வழக்கம் மக்களிடையே உள்ளது பூக்களை காய வைத்து பொடி ப்பதற்கு பயன்படுத்த தோல் பொலிவு பெறும் உளுத்தம் மாவோடு உலர்ந்த ஆவார இலைகளை சேர்த்து மூட்டுகளில் பற்று போட வீக்கம் வழி குறையும் ஆவாரம் பூ மாங்குழுந்து சேர்த்து தயாரிக்கப்படும் குடிநீர் மூல நோயின் தீவிரத்தை குறைக்கும்.


 ஆவாரைக் கண்டோர் சாவாரை கண்டதுண்டோ பழமொழி பளிச்சிடும் மஞ்சள் நிற பூக்களை உடைய அழகிய குறும் செடி இதன் பட்டை தோல் பதனிட பயன்படுகிறது இலை பூ காய் பட்டை பிசின் வேர் என தனது முழு உடலையும் மனிதர்களுக்கு மருத்துவ தானமாக அளிக்கும் ஆவாரை இருக்கும்போது நோய்களை கண்டு அஞ்ச வேண்டாம் பூவை குடிநீராகி பாலில் கலந்து இதழ்களை கறி கூட்டாகவோ நாள்தோறும் பயன்படுத்த மேகவட்டை உடல் சூடு உடல் நாற்றம் உடலில் உப்பு பூத்தல் வறட்சி ஆயாசம் நீங்கும் உடலுக்கு பலத்தை தரும் தேகம் பொன்னிறமாகும் வேர் இலை பட்டை பூ காய் சூரணம் 10 கிராம் வீதம் காலை மதியம் மாலை வெந்நீருடன் உட்கொள்ள பிரமோகம் மதுமேகம் மிகு தாகம் மிகுப்பசி உடல் மெலிவு உடல் எரிச்சல் உடல் முழுவதும் வேதனை பல குறைவு மயக்கம் மூச்சு திணறல் ஆகியவை தீரும் 45 ல் 90 நாட்கள் சாப்பிட வேண்டும் உலர்ந்த பூ 10 கிராம் 250 மில்லி நீரில் இட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை பருகிவர உச்சூடு நீரிழிவு நீர்க்கடுப்பு ஆகியவை குணமாகும் நன்றி.

நன்றி .

No comments:

Post a Comment