Tuesday, March 26, 2024

கள்ள நோட்டு அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்படுவது எப்படி?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன் பணவீக்கம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? என்பதை அறிய வேண்டும். பண வீக்கம் என்பது பணத்தின் மதிப்பு குறைதல் ஆகும். அதாவது, விலைவாசி உயர்வு..: முன்னே 10 ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் இப்பொழுது 15 ரூபாய்க்கு வாங்குவது. இங்கே பணத்தின் மதிப்பு குறைந்து பொருளின் மதிப்பு அதிகரித்துள்ளது. பொதுவாக பொருளின் மதிப்பு எப்போது அதிகரிக்கும் எனில் அதனுடைய தேவை அதிகரிக்கும் போது. மக்கள் தங்களிடம் அதிகம் பணம் உள்ளபோது அவர்கள் அதிகமாக பொருட்கள் வாங்குவதால் அதன் விலை அதிகரிக்கிறது. இப்போது நம் கேள்விக்கு வருவோம். R.B.I குறிபிட்ட அளவு பணத்தை புழக்கத்தில் விட்டு இருக்கும். கள்ள நோட்டு புழக்கத்தில் வருவதால், புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு அதிகரிக்கிறது.எனவே, மக்களின் பொருட்கள் வாங்கும் திறன் உயர்கிறது. எனவே பொருளின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்கிறது. எனவே பணவீக்கம் அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment