Sunday, March 31, 2024

மட்டன் குழம்பு

 *தேவையான பொருட்கள்*

மட்டன் - அரை கிலோ

புளிக்காத தயிர் - 4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 150 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

மட்டன் மசாலா - 3 ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

நல்லெண்ணெய் - ஒரு குழி கரண்டி அளவு

தாளிப்பதற்கு பட்டை, சோம்பு ,ஏலக்காய் - சிறிதளவு

கருவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

இஞ்சி - விரல் நீளத் துண்டு

பூண்டு - 10 பல்

சோம்பு - அரை ஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

அண்ணாச்சி பூ - 1

கிராம்பு - 3

அரைக்கக் கொடுத்துள்ள இஞ்சி ,பூண்டு பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம் ,பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மட்டனை நன்கு கழுவி அதில் தயிர் , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.


குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை ,சோம்பு ,ஏலக்காய் போட்டு தாளித்து சின்ன வெங்காயம் ,பெரிய வெங்காயம் போட்டு மூன்று நிமிடம் நன்கு வதக்கி அதனுடன் அரைத்த இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

அதனுடன் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மட்டன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.


பின்பு அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி அதில் மட்டனும் சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு போட்டு 10 நிமிடம் நன்கு வதக்கவும் .


பின்பு மட்டன் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஏழு விசில் விட்டு இறக்கவும்.


பின்பு குக்கரை திறந்து பார்த்து குழம்பு தண்ணியாக இருந்தால் மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு குழம்பு கெட்டியானவுடன் மல்லி இலை தூவி இறக்கினால் மிகவும் சுவையான மட்டன் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment