Tuesday, March 26, 2024

இட்லி பொடி - Idli Podi - சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகளில் இன்று இட்லி பொடி செய்முறை பார்ப்போம் வாருங்கள்...!*

*தேவையான பொருட்கள்:*


கடலைப்பருப்பு - 1/2 கப்

உளுத்தம்பருப்பு - 1 கப்

வெள்ளை எள் - 1/4 கப்

மிளகாய் வற்றல் - 20

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்

பூண்டு பற்கள் - 15

கல் உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2.5 டேபிள் ஸ்பூன்


*செய்முறை:*


1. கனமான இரும்பு வாணலியை சூடாக்கி அதில் வெள்ளை எள்ளை சேர்த்து மிதமான சூட்டில் சட சடவென பொரிந்து வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும். 


2. அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் 1/2 கப் கடலைப்பருப்பை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். கடலைப்பருப்பு லேசாக நிறம் மாறி வரும் போது உளுத்தம்பருப்பை சேர்த்து கைவிடாமல் மிதமான சூட்டில் நன்கு சிவந்து வாசம் வரும் வரை வறுக்கவும். பின் தட்டில் மாற்றிக் கொள்ளவும்.‌


3. பின் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிளகாய் வற்றல் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். ஒரு நிமிடம் வறுபட்டவுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கைவிடாமல் வறுக்கவும். மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை முறுகலானதும் தட்டில் மாற்றி கொள்ளவும். 


4. பின் மீதமுள்ள எண்ணெய் விட்டு தட்டிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு சிவந்து வரும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து விடவும். 


5. வறுத்து வைத்துள்ள பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவும்.‌


6. மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்த பருப்பை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பின் வறுத்த மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொடிக்கவும். 


7. கடைசியாக பெருங்காயத்தூள், வறுத்த எள்ளு, வறுத்த பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மணக்க மணக்க இட்லி பொடி தயார். 


8. பொடியை ஆறவைத்து காற்று புகாத டப்பாவில் மாற்றிக் கொள்ளவும்.

No comments:

Post a Comment