Wednesday, March 20, 2024

அம்மான் பச்சரிசி - தினம் ஒரு மூலிகை

 


*அம்மான் பச்சரிசி* சித்திரை பாலாடை என்றும் அழைப்பார்கள் தானாக வளரும் சிறு செடி இனம் கூர்முனி பற்களுடன் ஈட்டி வடிவ இலைகளை உடைய பால் உள்ள செடி வயிற்று பூச்சி அகற்றி ஆகவும் மலமிளக்கியாகவும் வெப்பு தனிப்பானாகவும் சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயல்படும் இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும் வாய் நாக்கு உதடு ஆகியவற்றில் காணப்படும் வெடிப்பு புண் அகலும் தூது வேலையுடன் சமையல் செய்து உன்ன தாது உடல் பலப்படும் அம்மான் பச்சரிசி கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து காலை மதியம் இரு வேலை எருமை தயிரில் உன்ன உடம்பு எரிச்சல் நமைச்சல் மேக ரணம் தாது இழப்பு தீரும் தாய்ப்பால் பெருக இலை பூ உடன் 30 கிராம் அரைத்து கொட்டை பாக்கு அளவு பாலில் கலந்து அருந்தலாம் அம்மான் பச்சரிசியின் பாலை தடவி வர நகைச்சுற்று முகப்பரு பால் பரு மறையும் கால் ஆணிக்கு தடவ வழிக்குறையும் இலையை நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்க சிறுநீருடன் குருதிப் போக்கு மலக்கட்டு நீர் கடுப்பு உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும் அம்மன் பச்சரிசி அற்புதமான மூலிகை ஆகும்.

நன்றி.

No comments:

Post a Comment