Thursday, March 21, 2024

செய்தி துளிகள் - 21.03.2024 (வியாழக்கிழமை)


தேர்வுகள்

🌅🌅NEET PG நுழைவுத் தேர்வுகள் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

🌅🌅அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை இலக்கு.

🌅🌅12 ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உயர்கல்விக்கான க்யூட் [CUET) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2024

🌅🌅1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை - பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்தல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

🌅🌅திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மார்ச் 21 ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

🌅🌅மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு

🌅🌅IFHRMS Kalanjiyam செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்தல் - - கால அவகாசம் நீட்டிப்பு - PAN Update செய்தல் - வரித்தொகையை மாற்றம் செய்தல் - Savings & Exemptions Proof of Documents சமர்ப்பித்தல் - தொடர்பாக - கருவூலங்கள் மற்றும் கணக்குகளின் ஆணையாளரின் கடிதம் வெளியீடு

🌅🌅UPSC சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு மே 26-அன்று நடைபெறவிருந்ததை ஜுன் 16 அன்று  ஒத்திவைத்துள்ளனர்

🌅🌅கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு 31.3.2024 வரை விண்ணப்பங்கள்  வரவேற்பு

🌅🌅தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு அனுமதிக்கப்படும் தர ஊதியம் குறித்து அரசின் தெளிவுரைக் கடிதம் வெளியீடு.

🌅🌅அரசுப் பள்ளிகளில் 18 நாள்களில் 2.31 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

(நாளிதழ் செய்தி)

🌅🌅TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு மீண்டும் 18.04.2024.க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🌅🌅தமிழ்நாட்டில் அம்மை நோய் பரவும் அபாயம் - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

🌅🌅பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு

🌅🌅1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவத் தேர்வுக்கு ரூ.2.43 கோடி நிதி: தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு

🌅🌅திருத்தப்பட்ட CA தேர்வு அட்டவணை வெளியானது

👉CA மே 2024 தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வெளியிட்டுள்ளது. அதன்படி,

👉இடைநிலை குரூப் I தேர்வுகள்- மே 3, 5, 9,

👉குரூப் 2 தேர்வுகள்- மே 11, 15, 17,

👉குரூப் 1 இறுதித் தேர்வுகள்- மே 2, 4, 8,

 👉குரூப் 2 இறுதித் தேர்வுகள்- மே 10, 14 16,

👉சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள்- மே 14, 16

ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

🌅🌅ஜூலை 7-ம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு தேதி ஜூன் 23-ம் தேதிக்கு மாற்றம்

நீட் தேர்வு முடிவுகள் ஜூலை 15இல் வெளியாகும்.

ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு

🌅🌅அரசு அலுவலகங்களில் e-office நடைமுறைப்படுத்துதல் - ரூ.19 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு.

🌅🌅தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்

-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🌅🌅ஐபிஎல் தொடக்க போட்டியில் பங்கேற்க சென்னை வந்தடைந்த RCB வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

நாளை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை எதிர்கொள்கிறது RCB.

🌅🌅அதிமுக கூட்டணியி

🌅🌅திமுக தேர்தல் அறிக்கை:

👉மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்

👉ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்

👉திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

👉ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்

👉இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

👉காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்

👉விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்

👉குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்                                    👉நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

👉மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்

👉பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது

👉மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்

👉100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்

👉தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்

👉பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்

👉நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்.

🌅🌅தங்கள் அணியின் பெயரில் இனி 'Bangalore' என்பதற்கு பதிலாக 'Bengaluru' என்றே பயன்படுத்தப்படும் என அறிவித்து புதிய லோகோவை அறிமுகப்படுத்தியிருக்கிறது RCB அணி நிர்வாகம்!

🌅🌅தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

🌅🌅டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள், அதனை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் ₹1229 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

🌅🌅பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் - டிடிவி தினகரன்

🌅🌅பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ‘அணில்’ போல் செயல்படும்

திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை வீடு வீடாக சென்று முறியடிப்போம்

-டிடிவி தினகரன்

🌅🌅பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள்  முன்னேறக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

🌅🌅போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை:

சொந்த பயன்பாட்டு கார்களை வாடகை வாகனமாக பயன்படுத்தக் கூடாது

தேர்தல் நேரத்தில் சிலர் பயன்படுத்துவதாக புகார்கள் வருகிறது, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

-போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம்.

🌅🌅வேலூர் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார் மன்சூர் அலிகான்!  

🌅🌅அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார் SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் 

🌅🌅நாளை (மார்ச் 22) நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சி நிகழ்த்தவுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

🌅🌅ஒன்றிய இணையமைச்சர் ஷோபா மீது திமுக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம்  உத்தரவு.

🌅🌅மூளையில் அறுவை சிகிச்சை

ஒற்றை தலைவலியால் அவதிப்பட்ட

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு, டெல்லி அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை

சிடி ஸ்கேனில், மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு கண்டறியப்பட்ட நிலையில்

அறுவை சிகிச்சை

🌅🌅நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு.

🌅🌅ED வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.

90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்காவிடில், சிறையில் இருப்பவருக்கும் ஜாமின் பெற உள்ள உரிமையை ED தடுக்கக் கூடாது. 

சட்டப்பூர்வ ஜாமின் உரிமையைத் தடுக்கும் குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்யக் கூடாது -உச்சநீதிமன்றம் தகவல்

🌅🌅அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

திருவள்ளூர்(தனி), கடலூர், விருதுநகர், மத்திய சென்னை, தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு.

🌅🌅எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு வந்தது மகிழ்ச்சி!

முதல்முறையாக அதிமுக அலுவலகம் வந்துள்ளேன் 

2011 ல் ஏற்பட்ட மாபெரும் வெற்றி கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது 

பிரேமலதா                                              🌅🌅வாக்கு குறைந்தால் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்

தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.

நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும் தான் பொறுப்பு

தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய - நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை  எடுக்கப் போகிறேன்

வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை.

🌅🌅வங்கிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் எஸ்எம்எஸ் களுடன் வரும் லிங்குகளை  எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்த முயலாதீர்கள்... 

ஒரு நொடியில் உங்கள் வங்கி கணக்கிலிருந்து தொகையை திருடி விடுவார்கள்..

சைபர் க்ரைம் எச்சரிக்கை

🌅🌅தமிழ்நாட்டில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று முதல் வரும் 25ம் தேதி வரை தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவம் (FORM 12D) வழங்கப்படும்.

வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் 12D படிவத்தை பெற உள்ளனர்; ஆனால் இது கட்டாயமல்ல.

🌅🌅டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளில் நிதியுதவி - ஏப்ரல் 1 முதல் அமல்

தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் ₹14,000 நிதியுதவி ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிப்பு!

கர்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் ₹6,000,

குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ₹6,000,

குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ₹2,000 வழங்கப்பட உள்ளது.

🌅🌅மக்களவைத் தேர்தலில் டெபாசிட் தொகை

👉தமிழகத்தில் 7 தனித்தொகுதிகள் உள்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.

👉பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.25,000 செலுத்த வேண்டும்.

👉இதே போன்று, தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும்.

👉தேர்தலில் பதிவாகும் செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறினால் வேட்பாளர் டெபாசிட் இழப்பர்

🌅🌅பொதுத்துறை கட்டடங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகளை 48 மணி நேரத்தில் அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹21 தொகுதிகளில் போட்டியிடும்  திமுக-வின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

👉வடசென்னை - கலாநிதி வீராசாமி

👉தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

👉மத்திய சென்னை - தயாநிதி மாறன்

👉ஶ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

👉காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம்

👉அரக்கோணம் -எஸ்.ஜெகத்ரட்சகன்

👉வேலூர் - டி.எம்.கதிர் ஆனந்த்

👉தருமபுரி - ஆ.மணி

👉திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

👉ஆரணி - எம்.ஸ்.தரணிவேந்தன்

👉கள்ளக்குறிச்சி - மலையரசன்

👉சேலம் - செல்வகணபதி

👉ஈரோடு - பிரகாஷ்

👉நீலகிரி (தனி) - ஆ.ராசா

👉கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்

👉பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி

👉பெரம்பலூர் - அருண் நேரு

👉தஞ்சாவூர் - ச.முரசொலி

👉தேனி - தங்க தமிழ்ச்செல்வன்

👉தூத்துக்குடி - கனிமொழி

👉தென்காசி (தனி) - ராணி ஶ்ரீகுமார்

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 2 லட்சத்தை தாண்டியது

👉அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது.இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 4 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை இலக்கை கொண்டு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு வசதிகளை அரசு பள்ளிகளில் கொண்டு வர இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும்? அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள், அவர்களின் திறனை வளர்க்க உள்ள விஷயங்கள் உள்பட பல்வேறு தகவல்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரைஅரசு பள்ளிகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிற 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் இலக்கான 4 லட்சத்தை எட்டிவிடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment