Wednesday, March 20, 2024

அமுக்கிரான் - தினம் ஒரு மூலிகை



 *அமுக்கிரான்* செடி வகை பார்ப்பதற்கு கத்தரிச் செடி போல இருக்கும் மருத்துவ பயிராக பயிர் செய்யப்படுகிறது இதன் வேர்ப்பகுதி கிழங்கு என்றும் கூறலாம் இவை மருத்துவ பயன் உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆயுர்வேதத்தில் அசுவ கந்தா என்று அழைப்பார்கள் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் பித்த நீர் பெருக்கியாகவும் குடல் தாது வெப்பு அகற்றி ஆகவும் பசி தூண்டுதலாகவும் காமம் பெருக்கியாகவும் செயல்படும் இலையை மென்மையாய் அரைத்து பற்றுப்போட எரிக்கரைப்பான் பாலியல் நோய் புண்கள் தீரும் கழங்கை பச்சையாக சிறு துண்டுகளாக்கி பாலில் அவிழ்த்து உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டி இருவேளை தேனில் சாப்பிட்டு வர இடுப்பு பிடிப்பு விலகும் வேர் சூரணம் 5 கிராம் தேனில் காலை மாலை உட்கொள்ள சளி குறைந்து நிமோனியா கப வாத ஜுரம் தீரும் அமுக்கிரான் சூரணம் 10 கிராம் கசகசா 30 கிராம் பாதாம் பருப்பு10 கிராம் சாரப்பருப்பு 5 கிராம் பிஸ்தா பருப்பு 5 கிராம் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து இனிப்பு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாட்கள் சாப்பிட இழந்த இளமையைப் பெறலாம்.
நன்றி.

No comments:

Post a Comment