Saturday, March 30, 2024

செய்தி துளிகள் - 30.03.2024(சனிக்கிழமை)


⛑️⛑️4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களது மூன்றாம் பருவத்திற்கான தேர்வில் தேதியில் மாற்றம் செய்து  கல்வித்துறை உத்தரவு.

👉அறிவியல் தேர்வு 10.04.24 க்கு பதிலாக 22.04.24 க்கும்...

👉சமூக அறிவியல் தேர்வு 12.04.24 க்கு பதிலாக 23.04.24 அன்றும் நடைபெறும் 

பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️'இனி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் தேசிய தகுதி தேர்வு கட்டாயம்' - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பு வெளியீடு.

⛑️⛑️தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

⛑️⛑️தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: ஏப்.3-ஆம் வாரத்தில் தொடக்கம்.!                                        ⛑️⛑️சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு.                                                              ⛑️⛑️TNPSC மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வெளியீடு.

⛑️⛑️TNPSC - (தொகுதி – II) - மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியீடு (Press Release)

⛑️⛑️புதிய உச்சத்தை அடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,120 உயர்வு. ஒரு சவரன் ₹51,120க்கு விற்பனையாகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரு கிராம் ₹6,390க்கு விற்பனை

⛑️⛑️"மோடி பிரதமராக வரக்கூடாது" ப.சிதம்பரம் பேச்சு 

தமிழக அரசின் தலைமைச் செயலர் நியமனத்திலும், டிஜிபி நியமனத்திலும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திலும் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது. 

அடுத்த தேர்தல் வரவேண்டும் என்றால் மோடி பிரதமராக வரக்கூடாது - திருப்பத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

⛑️⛑️தூத்துக்குடி முத்துகளை பில்கேட்ஸுக்கு மோடி பரிசளித்தார்.

தூத்துக்குடி முத்துகள், களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாட்டு குதிரை பொம்மைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். 

செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து பிரதமரின் இல்லத்தில் இருவரும் கலந்துரையாடியபோது பரிசளித்தார்

⛑️⛑️தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்:

சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.

⛑️⛑️எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த Xiaomi நிறுவனத்தின் முதல் மின்சார கார் அறிமுகமானது.

இதன் ஆரம்ப விலை ₹25 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

⛑️⛑️சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி உங்களுக்கு கியாரண்டி கொடுத்தாரா?

தருமபுரியில் நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராம்தாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

⛑️⛑️நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று எங்கள் மீது உள்ள பயத்தில் சின்னத்தை முடக்கி விட்டனர்" 

சீமான் ஆவேசம்

⛑️⛑️ஒரே நாடு ஒரே தலைவர் என்ற சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்கிறது 

பா.சிதம்பரம்

⛑️⛑️தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால்தான் 5 முறை தேர்தலில் நின்றும் தோற்றுப் போனேன்

தேர்தலில் நிற்க பணம் இல்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்தில் எதார்த்தமான உண்மை இருக்கிறது"

தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்

⛑️⛑️ஏப்ரல் 1 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கணக்கு முடிப்பதால் மக்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது மற்றும் டெபாசிட் செய்வது ஏப்ரல் 1, 2024 தற்காலிகமாக நிறுத்தப்படும்.

⛑️⛑️தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு அளித்துள்ளது.

👉தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடத்தப்படுவதால் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

⛑️⛑️தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் சிறப்பாக செயல்படுகின்றனர்

கட்சியின் செயல்பாடுகளை தமிழக பாஜகவினர் சிறப்பாக பரப்பி வருகின்றனர்

பிரதமர் மோடி X தளத்தில் பதிவு

⛑️⛑️இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சூழலில், மக்களின் ‘அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்' பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து

⛑️⛑️தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் 1,383 புகார் பெறப்பட்டுள்ளது

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

⛑️⛑️இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது

2047 இல் தனது இலக்கை இந்தியா எட்டும்

இந்தியாவின் வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை தவறு: 

நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி பதில்

⛑️⛑️ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு, 

ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் தேர்தலில் நிற்கும் 5 பேருமே தகுதியானவர்களே

எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் 

மதுரையில் ஈபிஎஸ் பேட்டி

⛑️⛑️நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 6-ந்தேதி வெளியீடு.

⛑️⛑️மார்ச் 31 ஞாயிறு அன்று வங்கிகள் அனைத்தும் இயங்கும்

ரிசர்வ் வங்கி அறிவிப்பு.                                                      ⛑️⛑️தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்திருக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர்,

 2 மாநில ஆளுநர் பதவியை விட்டு, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென போன் போட்டு சொல்லி இருப்பேன்’ என்றார்⛑️⛑️ ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

⛑️⛑️கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.                          ⛑️⛑️காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி.

⛑️⛑️டெல்லி ராம்லீலா மைதானத்தில் 31-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி

⛑️⛑️நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பேன் : தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்

⛑️⛑️நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும்  கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment