Wednesday, March 20, 2024

அத்தி மரம் - தினம் ஒரு மூலிகை



*அத்தி மரம்*.  சுக்கிரனுக்கு நிகராக செயல்படுகிறது சுக்கிரனுடைய ஆதிபத்தியம் பெற்ற மரம் அத்திமரம் அத்தி மரம் மிகவும் வலிமையான மரம் இந்த மரத்தை பார்த்தால் கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்பது பழமொழி அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும் பூப்பதே தெரியாதே அத்தி மர பலகையில் உட்கார்ந்து செய்யப்படும் செயல்கள் யாவும் நல்ல சுபிட்சமாகவும் நீடித்தும் நிலைக்கும் தோஷங்கள் நீங்குவதற்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பார்கள் அத்தி இலை கொடுத்தால் மிகவும் விசேஷம் எல்லா தோஷமும் நீங்கும் இலை பிஞ்சி காய் பழம் பால் பட்டை மருத்துவ குணம் உடையது அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய் சர்க்கரை கலந்து காலை மாலை அருந்த நீரிழிவு குருதி கலந்த ரத்தப்போக்கு பெரும்பாடு சிறுநீரில் குருதி கலந்து போதல் நரம்பு பிடிப்பு பித்தம் ஆகியவை தீரும் அத்திப்பாலை தடவி வர மூட்டு வலி விரைவில் தீரும் அத்திப்பழத்தை உலர்த்தி இடித்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி காலை மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும் ரத்தம் பெருகும் அத்தியில் புரோட்டின் சர்க்கரை சத்து கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.

நன்றி

No comments:

Post a Comment