Wednesday, March 20, 2024

செய்தி துளிகள்* 17.03.2024(ஞாயிற்றுக்கிழமை)

🌈தமிழகத்தில் ஏப்ரல் 19ல் மக்களவை தேர்தல்

👉வேட்புமனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 20

👉வேட்புமனு தாக்கல் கடைசி நாள் - மார்ச் 27

👉வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28

👉வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் -  மார்ச் 30

👉வாக்குப்பதிவு - ஏப்ரல் 19

👉வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4

🌈🌈543 உறுப்பினர் கொண்ட மக்களவை தொகுதிகளுக்கான  தேர்தல்  7 கட்டங்களாக நடைபெறுகிறது                                      👉18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் 

👉முதற்கட்டம் -  ஏப்ரல் 19;

👉2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 26;

👉3ம் கட்ட தேர்தல் -  மே 7;

👉4ம் கட்ட தேர்தல் - மே 13;

👉5ம் கட்ட தேர்தல் - மே 20;

👉6ம் கட்ட தேர்தல் - மே 25;

👉7ம் கட்ட தேர்தல் - ஜுன் 1

🌈🌈நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும்

தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து தான் வருகிறது

மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது

கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியது தான் எங்களுடைய எண்ணம்

அமைச்சர் அன்பில் மகேஷ்

🌈🌈புதுமைப்பெண் திட்டம்- புதிய அரசாணை

புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் 49,664 மாணவிகள் கூடுதலாக பயன்பெறுவர்

🌈🌈புதுச்சேரி பள்ளிகளில் மார்ச் 24 முதல் கோடை விடுமுறை

👉புதுச்சேரியில் மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் மே 31 வரை கோடை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.                                🌈🌈அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ₹1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு

🌈🌈புதிய கல்விக் கொள்கையை திட்டவட்டமாக எதிர்கிறோம் - பி எம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தனி கமிட்டி அமைக்கப்படும்

மாநில உரிமையை பறிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு இதுபோன்று அழுத்தத்தை தருகிறது   

-அமைச்சர் அன்பில் மகேஷ்

🌈🌈புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்குமே ஏற்காது, PM SHRI SCHOOLS திட்டம் என்பது வேறு - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.

🌈🌈PM SHRI பள்ளிகளை தமிழ்நாட்டில் துவக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

🌈🌈சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு

🌈🌈பொதுப்பணித்துறையில் புதியதாக பணி நியமனம் பெற்ற உதவிப் பொறியாளர்களுக்கு, பயிற்சி வகுப்பினை, தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு!

🌈🌈மகாராஷ்டிராவில் நடைபெறும்

இந்தியா கூட்டணி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை

விமானம் மூலம் மும்பை செல்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

🌈🌈கிரிக்கெட் உபகரணங்களுக்கு பூஜை செய்து, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய கொல்கத்தா அணி

🌈🌈தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் 

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை கையில் வைத்திருக்க அறிவுறுத்தல்

🌈🌈நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் உள்ளனர்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

🌈🌈வெறுப்பு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக ‘இந்திய மக்களாகிய நாங்கள்’ ஒன்று சேர்ந்து போராடுவோம் 

-மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்

🌈🌈மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம்  தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை (மார்ச் 18) ஆலோசனை நடத்த உள்ளார்.

🌈🌈ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா:-

2024-ம் மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

பாஜகவின் தேசிய முற்போக்கு ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகிவிட்டது

நிர்வாக துறைகள் முழுவதும் நல்ல சேவை வழங்கியதன் அடிப்படையில் மக்களிடம் வாக்கு கேட்டு செல்கிறோம்

140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் நமது நாடு பாஜக அரசால் வளர்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது

-பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவு

🌈🌈அரசியல் கட்சியினர், தலைவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து புகார்கள் வரும்பொழுது நடுநிலையுடன் நடவடிக்கை எடுப்போம்

-இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

🌈🌈தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்த பிறகே அமலுக்கு வரும் 

நிதி உதவிகள் அறிவிப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட தடை 

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகளை தனியாகவோ, குழுவாகவோ அழைத்து பேசக் கூடாது

காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் ஒலிப் பெருக்கிகளை பயன்படுத்த‌க் கூடாது

அரசு சாரா பணிகள், பொதுத்துறையில் பணி நியமனங்கள் செய்யக் கூடாது

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்.

🌈🌈மக்களவைத் தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள்  செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

🌈🌈பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்

🌈🌈கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பாஜக அதிக நிதி பெற்றுள்ளது  என்ற பார்வை உள்ளது

தேர்தல் பத்திரங்களை ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தி இருக்கலாம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

🌈🌈தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது"

"50 ஆயிரம் வரை மட்டுமே கையில் பணம் எடுத்து செல்லலாம்"

"இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம்"

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

🌈🌈காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மல்லிகர்ஜுன கார்கே

 👉ஒவ்வொரு சமூகத்தின் பொருளாதார நிலையை உணர்ந்து திட்டங்கள் வகுக்கப்படும்

👉100 நாள் வேலையின் ஊதியம் நாடு முழுவதும் ரூ.400ஆக உயர்த்தப்படும் 

👉ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்படும் 

 👉முக்கிய அரசு பணிகளில் ஒப்பந்த பணியாளர் நியமன முறை ரத்து செய்யப்படும் 

 👉தனியார் நிறுவன தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும் 

 👉தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்ய சட்டங்கள் திருத்தப்படும் 

 👉அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், ஆயுள், விபத்து காப்பீடு  செயல்படுத்தப்படும்.

🌈🌈மாற்று கட்சியினர் பாஜகவில் ஐக்கியம்

அதிமுக முன்னாள் எம்பி விஜயகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரைச் செயலாளர் அனுஷா ரவி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

🌈🌈ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் ஆளுநர்"

துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார் ஆளுநர்

மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும்

தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை

மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம்"

தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும்"

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

🌈🌈சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920-க்கு விற்பனை

👉சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,115-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது

🌈🌈2ஆம் உலக தமிழ் செம்மொழி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்

5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என அறிவிப்பு

🌈🌈மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

🌈🌈மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படவுள்ளன.

👉இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

👉1.5 கோடி தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள், 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன" என்றார்.

🌈🌈வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

👉இந்த நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள் இன்று விண்ணப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.                                    👉கடந்த பிப்.29-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.


🌹👉அதன் விவரம்:

👉தமிழ்நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 54,81,564 ஆகும். அதில், ஆண்கள் 25,26,487 பேரும், பெண்கள் 29,54,,792 பேரும் உள்ளனா்.

👉மூன்றாம் பாலினத்தவா் 285. இந்த எண்ணிக்கையில், வயது வாரியாக பதிவுதாரா்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் 11,495 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 24,12,771 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 17,21,980 பேரும் உள்ளனா். 

👉46 வயது முதல் 60 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 2,39,391 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வை மாணவா்கள் முடித்து தங்களது கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும்போது, இப்போதிருக்கும் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

No comments:

Post a Comment