Monday, March 25, 2024

செய்தித் துளிகள் - 25/03/2024 (திங்கள் கிழமை)

 


⛑️⛑️தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.

⛑️⛑️ஜனவரி பருவ மாணவர் சேர்க்கை 31 வரை நீட்டிப்பு: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

⛑️⛑️பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று நிறைவு: விடைத்தாள் திருத்தம் ஏப்.6-ல் தொடங்கும்

⛑️⛑️Last Date For Declaration Of Income Tax Regime Option For The Financial Year 2024-25 Upto 15.04.2024.

⛑️⛑️எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் தேர்வர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களே சலுகைகள் வழங்க அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு.

⛑️⛑️12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 03.04.2024 முதல் 04.05.2024 வரை உயர் கல்வி வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️6 முதல் 8-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வழிகாட்டுதல் வெளியீடு.

⛑️⛑️மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: மத்திய கல்வி அமைச்சகம் முடிவு

⛑️⛑️TNPSC குரூப் 2 பதவிக்கு இன்டர்வியூ அறிவிப்பு

⛑️⛑️அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

⛑️⛑️திறந்தநிலை படிப்பு நடத்த பெரியார் பல்கலைக்கு தடை

⛑️⛑️சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்                                               ⛑️⛑️பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

⛑️⛑️தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் 

⛑️⛑️தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

⛑️⛑️டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் 

⛑️⛑️சிறையில் இருந்தாலும் மக்கள் சேவை தொடரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

⛑️⛑️மறு அறிவிப்பு வரும் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு

⛑️⛑️அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

👉தேனி - டிடிவி.தினகரன்

👉திருச்சி - செந்தில்நாதன்

⛑️⛑️மக்களவைத் தேர்தலில், கர்நாடகா, கேரளா,  தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

⛑️⛑️விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

⛑️⛑️தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர். மக்களுக்கு தெரியும் தேர்தலில் போட்டி என வந்ததுவிட்டால் அது அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையேதான் 

திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

⛑️⛑️டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து 31ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படும் 

மாநில அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு

⛑️⛑️தருமபுரியில் 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்களிக்க அழைப்பு விடுத்து, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு, மணமகன், மணமகள் என அச்சிட்டு பொன்னாகரம் பகுதியில் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த மாவட்ட அரசு அதிகாரிகள்!.                                                 ⛑️⛑️அரசியலும், மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை;

குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களை தாக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான விவகாரம்;

நேற்று நம்மை திட்டிய கூட்டணி கட்சியினர் இன்று நாட்டுக்காக நிற்கிறார்கள் என்று பாராட்ட வேண்டும்;

தேர்தல் பத்திரம் நன்கொடை வழக்கில், தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்-ன் பேச்சும், செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது”

நடிகர் கமல்ஹாசன்

⛑️⛑️இப்போது நான் தியாகம் செய்யவில்லை.

வியூகம் அமைத்துள்ளேன்

எனக்கு எதிரியே சாதியம் தான்

கமல்ஹாசன்

⛑️⛑️மார்ச் 29ம் தேதி முதல் திமுக கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை செய்கிறார்.

⛑️⛑️சூர்யவம்சம் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியை கலெக்டர் ஆக்கினேன்...  

அதேமாதிரி ராதிகாவை எம்.பி.ஆக்குவேன்  

சரத்குமார்  பேட்டி

⛑️⛑️செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்

என் அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டே நான் அரசியலுக்கு வந்தேன்

என் அப்பாவுக்காகவும் கட்சிக்காக மட்டுமே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்

துரை வைகோ மதிமுக வேட்பாளர்

⛑️⛑️6 மாநிலங்களில் விசிக வேட்பாளர்கள் போட்டி

கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

ஆந்திராவில் போட்டியிட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கேரளாவில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் ஒரு இடத்திலும் விசிக போட்டி

விசிக தலைவர் திருமாவளவன்.

⛑️⛑️வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சல புத்தகம், ஓட்டுநர் உரிமம், PAN CARD, PASS PORT, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், MP/MLAக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

⛑️⛑️ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடனும், நம்பகத்தன்மையுடனும் செய்திகளை வெளியிடுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் 

குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தங்கர் .

⛑️⛑️சென்னை - குஜராத் ஐபிஎல் டிக்கெட் விற்று தீர்ந்தது

26ம் தேதி நடைபெறவுள்ள சென்னை - குஜராத் ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தது

⛑️⛑️சந்தன கடத்தல் வீரப்பன் மகள் தேர்தலில் போட்டி

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில்

ஒருவர்

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யா ராணி

⛑️⛑️இபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!"

“2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி பட்டன் அழுத்தியபோது, பக்கத்தில் நின்று கைத்தட்டினீர்களே பழனிசாமி..

அதற்கு பின் எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என ஒருமுறையாவது மத்திய அரசின் கதவை தட்டினீர்களா?"

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்:-

👉வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மற்ற வகுப்பினருக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைப்பு வடிவமைத்து வருகிறது.

இதற்கிடையே, வரும் 2024 - 25ம் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை மாற்ற உள்ளதாக, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ.,க்கும் தகவல் அனுப்பியுள்ளது.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குனர் ஜோசப் இமானுவேல், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும்; மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாறுதலும் இல்லை                                                    🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment