Sunday, March 31, 2024

செய்தித் துளிகள்- 31.03.2024(ஞாயிற்றுக்கிழமை)


🌅🌅மூன்றாம் பருவத் தேர்வுகள்:

புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🌹👉மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

04.04.2024 உடற்கல்வி

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

🌹👉குறிப்பு:

6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.

8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.

உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.

🌅🌅கல்வி உதவி தொகைக்கு ekyc பணியினை மேற்கொள்ளும் ITK தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை.

🌅🌅ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் கணக்காயர்களுக்கான (Accountants) சான்றிதழ் படிப்புகள் - மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🌅🌅பிரதமர் மோடியின் ரோடு ஷோ  மாணவர்கள் பங்கேற்பு வழக்கு: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்- உயர் நீதிமன்றம்.

🌅🌅அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB).மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது.

🌅🌅2024 மக்களவை தொகுதிக்களுக்கான பொதுத் தேர்தலை முள்ளிட்டு , 34 - விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வாக்குச் சாவடியில் பணிபுரிந்திட நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று 2 - ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🌅🌅இனி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் தேசிய தகுதி தேர்வு கட்டாயம்' - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பு

🌅🌅வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  மணிமொழி அவர்களுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பணி ஒதுக்கீடு. 

🌅🌅TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி வெளியானது.நேற்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

🌅🌅ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டு

🌅🌅ஏப்ரல் 4-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்:

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. 

இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 4 மாநில நீர்ப்பாசனத்தை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

🌅🌅"தமிழ் என்னுடைய தாய்மொழியாக கிடைக்காதது வருத்தம் தான்"

மொத்த தமிழ்நாடும் ஜெயித்து விட்டு வர வேண்டுமென அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளேன்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரையும் நான் அண்ணாமலையாக தான் பார்க்கிறேன்

-பிரதமர் மோடி

🌅🌅பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சிதம்பரத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவில் இணைந்ததாக தகவல்.

🌅🌅திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்

மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு.

🌅🌅பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில், போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

🌅🌅அதிமுக வெற்றி பெற்றால் புதுச்சேரி 'சிங்கப்பூர்' போல மாற்றப்படும்!

புதுச்சேரி மாநில அந்தஸ்த்து பெற நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கப்படும்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

🌅🌅பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழு அமைப்பு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

🌅🌅தேர்தல் அதிகாரிகள் உறுதியுடன் நடந்து கொள்ள வேண்டும்

"பிரபலமான வேட்பாளர்கள் மட்டுமின்றி அனைத்துக் கட்சி வேட்பாளர்களிடமும் தேர்தல் அதிகாரிகள் உறுதியுடன் நடந்துகொள்ள வேண்டும்"

தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

🌅🌅தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்கள், தென் சென்னையில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சமாக தஞ்சை, காஞ்சிபுரம் தொகுதிகளில் தலா 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன

🌅🌅50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இதுகுறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது 

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

🌅🌅பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிப்பு

நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது இதுவே முதல்முறையாகும்.

எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

🌅🌅அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50% பணியிடங்கள் ஒதுக்கப்படும்

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50% பணியிடங்கள் ஒதுக்கப்படும்

பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள்

ராகுல்காந்தி

🌅🌅தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட தடை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை;

ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட கூடாது என கட்டுப்பாடு.!

🌅🌅கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளது

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி MP

🌅🌅தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

ஒரு கிராம் தங்கம் ரூ.6,370க்கும், ஒரு சவரன் ரூ.50,960க்கும் விற்பனை

🌅🌅மக்களை சந்தித்தால் வெற்றி கிடைக்காது என தெரிந்தே நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடவில்லை தருமபுரியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🌅🌅KYC அப்டேட் பண்ண இன்று கடைசி நாளாகும்.

👉ஃபாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC-யை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் இன்று (மார்ச் 31) முடிவடைகிறது.

👉முன்னர் பிப்.29 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில்,பின்னர் அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

👉 'ஒரே வாகனம், ஒரே Fastag' என்ற திட்டத்தின் மூலம், ஒரே Fastag-ஐ பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது,

👉ஒரே வாகனத்திற்கு பல Fastag-களை பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.

👉உடனே KYC அப்டேட் பண்ணுங்க


🌹சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


👉சென்னை: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன்,சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட எங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களை நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.

பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டு மீண்டும் மாவட்ட அளவில் புதிய பட்டியல் தயாரித்து பணிநியமனம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் உரிய தகுதிகள் இல்லாதவர்களை 2019-20ல் துணை தாசில்தார்களாக நியமிக்க கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் 2012-22-ல் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட தங்களை நிராகரித்துவிட்டு தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்டவர்களை தாசில்தார்களாக நியமிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இது குறித்து வருவாய் ஆணையருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களை நிராகரித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பணிநியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில், "பணிநியமனம் செய்தபோது அனைவரும் உதவியாளர்களாக இருந்ததால் துணை தாசில்தார்களாக நியமிக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், தேர்வு வாரியத்தால் பணியில் சேர்ந்தவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் புதிய பட்டியலை தயார் செய்து 4 வாரங்களில் பணி நியமனம் நடைபெற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment