Monday, March 25, 2024

ஆகாச கருடன் கிழங்கு - தினம் ஒரு மூலிகை


*ஆகாச கருடன் கிழங்கு*  கோவை இனத்தைச் சார்ந்த கிழங்குடைய ஏறு கொடி தானாக வளரும் கிழங்கு கசப்பு சுவை உடையது மருத்துவ குணம் உடல் தேற்றவும் பலம் மிகுக்கவும் விஷக்கடிகள் நீக்கவும் பயன்படும் கிழங்கை மென்மையாய் அரைத்து 50 மில்லி நீரில் கொட்டைப்பாக்களவு கலந்து மூன்று நாட்கள் காலையில் மட்டும் அருந்த மேல் பூச்சாக பூசி வர நாய் நரி குரங்கு பாம்பு விலங்குகளின் கடினஞ்சு தீரும் கழங்கை தோல் நீக்கி உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டி பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு உப்பு புளி நீக்கி உணவு உண்டு வர பாம்பு நஞ்சு கீல் பிடிப்பு மேக நோய்கள் தீரும் 100 கிராம் கிழங்குடன் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கீழ்வாதத்திற்கு பற்றிட குணமாகும் வீடுகளில் கிழங்கை வாசற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் இட்டு கட்டி விடுவார்கள் இதனால் தீய சக்தி விஷக்கடி ஜந்துக்கள் வீட்டிற்கு வராது என்று நம்பப்படுகிறது கிழங்கு காற்றில் உள்ள நீரை உறிஞ்சி உயிர் வாழும் தன்மை கொண்டது.

நன்றி

No comments:

Post a Comment