Tuesday, March 26, 2024

தினம் ஒரு சிந்தனை - 26.03.2024

அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. 

நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.

செய்தி ஒரு பார்வை :-

உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ உத்தரவிட முடியுமா?.

உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பது, அல்லது தீர்ப்பை ரத்து செய்வது இரண்டும் ஒன்று தானா?. இரண்டு கேள்விக்கும் ஒரே விடை சரிதானா?.

குற்றவாளி என்று தீர்ப்பிடப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் வயதையோ, நோயையோ காரணம் காட்டி தண்டனையை நிறுத்தி வைக்க கோரியதன் பேரில் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தால் அந்த நபர் குற்றவாளி இல்லை என்று பொருளா?...

உச்ச நீதிமன்றம் ஊழல் வழக்குகளில் முன்பு வழங்கிய தீர்ப்புக்களையும், பதிவு செய்த வார்த்தைகளையும் அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்றாமல் வெவ்வேறு விதமான வார்த்தை பிரயோகங்களை செய்து ஊழல் வழக்குகளுக்கு பல கோணங்களை உருவாக்குவது ஊழல்வாதிகளுக்கு எப்படியாவது தப்பி விடலாம் என்று எண்ணத்தை தான் உருவாக்கும்.


No comments:

Post a Comment