Tuesday, March 26, 2024

முருங்கைக்காய் மாங்காய் அவியல் - சமையல் குறிப்புகள்

முருங்கைக்காய் மாங்காய் அவியல் - Drumstick Raw Mango Aviyal:*

*தேவையான பொருட்கள்:*

முருங்கைக்காய் - 2

மாங்காய் - பாதியளவு

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுந்து - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 10 இலைகள்

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

*அரைக்க:*

தேங்காய்த்துருவல் - 1/2 கப் 

மிளகாய்வற்றல் - 2

சின்ன வெங்காயம் - 4

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

*செய்முறை:*

1. முருங்கைக்காயை 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கி பின் நடுவில் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். மாங்காயை அதே அளவில் தோலோடு நறுக்கிக் கொள்ளவும்.

2. ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.

3. முருங்கைக்காய் பாதி வெந்ததும் நறுக்கிய மாங்காயை சேர்த்து வேகவிடவும்.

4. முருங்கைக்காயும், மாங்காயும் வெந்ததும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடவும்.

5. அவியல் நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்ததும் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து இறக்கவும். 

6. வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான அவியலில் கலந்து கொள்ளவும்.

இந்த அவியலுக்கு முருங்கைக்காய் முத்தலாகவும் பிஞ்சாகவும் இல்லாமல் அளவான காயை தேர்ந்தெடுக்கவும். இதில் மாங்காய் சேர்ப்பதால் தயிர் அல்லது புளி சேர்க்க வேண்டாம்.

No comments:

Post a Comment