Tuesday, March 26, 2024

தன்னை அறிதல்

*தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையை.*_

_*எந்தப் புகாருமில்லாமல்*_

_*அதன் போக்கில்*_

_*அனுபவித்து வாழ்வதே*_ _*ஞானம்.*_


_பிரச்சனை தனித்தனியான மனிதரிடம் தான் இருக்கிறது._

_ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஆன்மீகம் என்று அழைக்கப்படுகிறது._

_ஆன்மீகம் என்பது தன்னில் மூழ்குதல்._


_*நான் யார் என்பதனுடைய வேறு ஒரு வடிவம்தான் எது நான்.*_

_*இந்த விஷயம் இன்னும் செத்துப் போகவில்லை.*_

_*எங்கோ சிறிய புல்தண்டாய்,*_ _*எங்கோ ஒரு சிறிய இளம் செடியாய் வெவ்வேறு இடங்களில் கிளை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.*_


_இது பெரும் மரமாகவோ, பெரும் காடாகவோ வளரவேயில்லை என்பதுதான் மிகப் பெரிய வேதனை. ஏன் வளரவில்லை என்பதுதான் கேள்வி._


_*இதற்கு அசாத்தியமான ஒரு உண்மை தேவைப்படுகிறது.*_

_*குழுவாக இருக்கிறபோது இந்த உண்மை மறைக்கப்பட்டுவிடும்.*_

_*காது கேட்காமல் அடைக்கப்பட்டுவிடும்.*_


_உண்மை_

_அறிந்து_ _கொள்ளப்படாததற்கு காரணம் மனிதருள் நேர்மை இல்லை._

_ஒவ்வொரு தனி மனிதருள்ளும்_

_நேர்மை இல்லை._


_*நேர்மையாக இருப்பது கடினமாக இருக்கிறது. உண்மையாக இருப்பது பெரும் சுமையாக இருக்கிறது. அமைதியாக இருப்பது என்பது பிடிக்காத விஷயமாக இருக்கிறது.*_


_எனவே, எந்த குழுவிலும் சேராமல், எந்த ஜாதி பெயரையும் சேர்த்துக் கொள்ளாமல் வெறுமே, வெறுமே உள்ளே பார்த்துக் கிட. நல்ல குரு உள்ளே தள்ளிவிட்டு விடுவார்._


_*யார் நல்ல குரு. தவித்து தவித்து தண்ணீராய் உருகு. எனக்கு நல்ல குரு வேண்டுமே என்று அலறு. அழு. உன் அலறலும், அழுகையும் நல்ல குருவை உனக்கு கொண்டுவந்து சேர்க்கும்.*_


_மற்றபடிக்கு கள்ளத்தனம் செய்பவரை கண்டு வெட்கி நகர்ந்துவிடுவாய். இப்படி இருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்._


_*எனவே, உங்களை அவதானிப்பதற்குண்டான விஷயங்களைத் தெளிவாக தேர்ந்தெடுத்து அவைகளை தனியாக கடைப்பிடிக்கும் போது தெளிவு அதிகமாகிறது.*_


_குழுவாக கை சேர்க்கும் போது_

_அவர் இழுத்த பக்கம் நீயும்,_

_நீ இழுத்த பக்கம் அவரும்_

_ஆட வேண்டியிருக்கிறது._


_*தனியாகத் தானே பிறந்தாய்.*_

_*தனியாகத் தானே சாகப்போகிறாய்.*_ _*எனவே தனியாகவே போராடு.*_

_*எவரும் இல்லை என்பதைப் புரிந்துகொள்.*_

_*அது மிகப் பெரிய ஒரு உண்மை.*_


_மனைவி, குழந்தை, தாய், தந்தை, சகோதரன், நண்பன் எல்லோரும் தற்காலிகமானவரே. நீயே நிரந்தரம். உன்னுடைய சத்தியமே நிரந்தரம். உன்னுடைய ஆத்ம இருப்பே நிரந்தரம்._


_*அது பல ஜென்மங்கள் தாண்டி வந்ததப்பா. இன்னும் பல ஜென்மங்கள் தாண்டப்போகிறது. ஏதோ ஒரு இடத்தில் அது கரைந்து காணாமல் போகும். இதையெல்லாம் எழுத்தாக்கிக் கொண்டிருக்க முடியாது.*_


_அந்த ஆள் நடிகரானதற்கும், அந்த ஆள் ஆஃபிஸரானதற்கும், இவர் ஓவியர் ஆனதற்கும், இந்த ஆள் கூலித் தொழிலாளியாய் வாழ்வதற்கும் என்ன காரணம் இருக்க முடியும். எந்தக் காற்றோ தூக்கியது. எந்தக் காற்றோ அழுத்தியது. எந்தக் காற்றோ, எப்போது எப்படி எதனால்._ 


_*தன்னை அறிவது மட்டுமே நோக்கமாக, எது உன் மனம், மனம் எங்கிருக்கிறது என்று தேடுகின்ற வாழ்க்கையே நோக்கமாக இருப்பதுதான் உன்னை நல்ல கதிக்கு சேர்க்கும்.*_


_இதை தெரிந்து கொண்டால் போதும். இதை புரிந்து கொண்டால் போதும். இதற்குப் பிறகு கற்க வேண்டியது எதுவுமே இல்லை என்று அறிந்து கொண்டால் போதும். இது படித்தால் போதும். இது போதும்._


_*எல்லாமும் இது தானே கொண்டுவந்து கொடுக்கும். எது கொடுத்தாலும் அதை எந்தவித ஆவலும் இன்றி அனுபவிக்கத் தோன்றும்.*_


_எங்கே எங்கே அலையாது_ _வந்தவை வரவில் வைக்கப்படும்._ _வராதவை பற்றி ஞாபகமே இருக்காது._

_அடாடா அடாடா என்ன அமைதி இது. என்ன சந்தோஷம் இது._

_என்ன நிறைவு இது._


_*இது போதும்*_ _*என்று*_ _*இருப்பதற்கு*_

_*என்ன*_ _*வேண்டியிருக்கிறது.*_

_*யார் தருவார்கள். உள்ளே கேட்கத் துவங்குங்கள். உள்ளே பார்க்கத் துவங்குங்கள்.*_


_ஒரு பாறையின் மீது நின்று உரக்க வெட்டவெளி_ _பார்த்து கத்துவது போல_ _விஷயத்தைச்_

_சொல்லி முடித்து விட்டேன்._


_*எந்த கடினமான*_

_*சூழ்நிலையிலும*_ _*தகுதியும் திறமையும்*_

_*கொண்டவர்கள் தப்பி*_

_*பிழைப்பார்கள்.*_


_இந்த உலகத்தில் சாதிக்க வேண்டும் என்றால் மிகையான போராடும் குணம் இருக்க வேண்டும்._


_*வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும்.*_


_வாழ்க்கையில் உழைத்து_ _சோர்வடைவதற்கு முன்பே_

_ஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம்.*_


_*வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே.*_


_தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி._


_*உங்களை*_ _*வெல்லும் தகுதி*_

_*தோல்விக்கே*_ _*இருக்கும் போது.*_ _*தோல்வியை வெல்லும் தகுதி*_ _*உங்களுக்கு*_

_*இல்லாமலா போய்விடும்.*_


_காலத்தின் மீது பழி போடாமல்_

_உங்கள்_ _முயற்சியைக் கை விடாமல் தொடருங்கள்._


_*விளக்கால்*_

_*வெளிச்சத்தைத்தான் காட்ட முடியும்.*_ _*பாதையில் நாம்தான் பார்த்துப் போகவேண்டும்.*_

No comments:

Post a Comment