Wednesday, March 20, 2024

அக்கணத்தில் தான் நீங்கள் தொடர்ந்து முயற்சிக்கவேண்டும்

 உங்கள் முயற்சியைக் கைவிடவிருக்கும் கணத்தில்தான் நீங்கள் தாக்குப் பிடிக்க வேண்டும். வெற்றிக் கோட்டிற்கு அப்பால் செல்வதற்கான நேரம் அதுதான். எல்லாம்முடிந்து விட்டது. நீங்கள் நினைக்கும் அக்கணத்தில் தான் நீங்கள் தொடர்ந்து முயற்சிக்கவேண்டும். நிறுத்துவதைப் பற்றி நீங்கள் நினைக்கும் அந்தக்கணத்தில்தான் நீங்கள் மேற்கொண்டு செல்ல வேண்டும். முடிவு வந்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் அக்கணம்தான் நீங்கள் தொடர்ந்து முன்னே செல்ல வேண்டிய கணம்.

உங்களுடைய முயற்சிகள் ஒவ்வொன்றிலும், நீங்கள் நடப்பதற்குத் தேர்ந்தெடுத்துள்ள ஒவ்வொரு பாதையிலும் வெற்றிக் கோட்டிற்கு அப்பால் செல்லுங்கள்.

தாக்குப்பிடிக்கும் சக்தியின் உதவியுடன், ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு வளைவாக மாறுகிறது. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருங்கள்.

உடலில் சிறு குறைகளை உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை...

பொதுவாக உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பது  இல்லை.

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் மாறுபாடுகள் நிறைந்தவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை...

மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவர்களில் இருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லாவகையிலும் வேறுபடுகின்றனர்...

குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத் தான் செய்கின்றன. அதைப் பெரிதாய் நினைத்து வருந்துகிறவர் உலகையே வெறுத்துப் போய் பார்க்கிறான்...

அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான்...

உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் சாதனையை விட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அரும் பெரும் சாதனைகள் பல என்றே சொல்லலாம்.

தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து, வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய சாதனை படைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்...

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், சாதிக்க வேண்டும் எனும் தணியாத தாகம் இருப்பவர்களுக்கு உடலில் இருக்கும் குறை ஒரு பொருட்டே அல்ல...!

இவர்கள் மட்டுமல்ல!, இவர்கள் போல பலரும் தங்கள் உடல் உறுப்புகள் பழுதுபட்டு இருந்தாலும் தங்களின் உள்ளம் உறுதியால் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளனர்...!!

உடலிலிருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றியிருக்க வேண்டும். உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும் போது திறமைகள் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்...!!!

மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே சுயமி (செல்ஃபி) எடுக்கச் செல்லலாம் 

எல்லா கல்லையுமா கருவறைக்குள் ஏற்ற முடியும், அதேபோல தான் வாழ்கையில் ஜெயுச்சவங்களும். சில கற்கள் செதுக்க முயற்சிக்கும் போதே வலி தாங்க முடியாமல் தன் தகுதியினை குறைத்து கொள்கின்றன.

உற்சாகமுள்ளவனை எதிர்ப்புகள் தடை செய்வதில்லை. மாறாக, அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.

பிரச்சினைகள் வரும் போது உடனே சமாளிப்பது எளிதல்ல. அப்படி சமாளிக்கத் தொடங்கி விட்டால் எந்த பிரச்சினையும் பெரிதல்ல.

செயல்களில் நிறைந்திருக்கும் ஓராயிரம் பாகுபாடுகள். மனதில் பதிந்திருக்கும் ஓராயிரம் பாகுபாடுகள். பாகுபாடுகள் மறைகிறதென்றால் ஒன்றுபடுகிறது சிந்தனை உணர்வுகளின் செயல்பாடுகள்.

தனது விசேஷத் தன்மையை கண்டறிந்து அதை பொறுப்புடன் பயன்படுத்தும் போது அனைத்திலும் வெற்றி கிட்டுவது நிச்சயம்.

ஒவ்வொரு நீர்த்துளியும் மரங்களுக்கு உயிரூட்டும் ஒவ்வொரு வியர்வைத்துளியும் நம் வாழ்வை உயர்த்தும்.

தோல்வியும் துன்பமும் தனியே வருவதில்லை. கூடவே வலிமையையும் அழைத்து வருகிறது.

பந்தயக் குதிரை ஓடும் போது அருகிலுள்ள புல்லையோ, கொள்ளையோ பார்ப்பதில்லை. ஏனெனில் அது தன் வெற்றி இலக்கை மட்டுமே மனதில் கொண்டு ஓடுகிறது.

ஒரு முயற்சி நிறுத்தப்படும் போது தோல்வியாகிறது. அதுவே, தொடரப்படும் போது வெற்றியாகிறது.

தன்னம்பிக்கையோடு பயணிக்கும் வாழ்க்கையில் வாழ்ந்துவிட வாய்ப்புகள் நிறைய உண்டு. ஊக்கமும் வவிமையும் இருந்தால்தான், வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

கறை இல்லாத இதயம் தான். கலக்கமில்லாத அமைதியை தரவல்லது. யாருடைய உரிமையையும் பறிக்காமலும் தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுக்காமலும் வாழ்வதே தன்மானம் என்பதாகும்.

தரையில் காலுக்கு அடியில் மிதிப்பட்டாலும், தண்ணீரில் இழுத்துச் சென்றாலும், புயற்காற்றில் அடித்துச் சென்றாலும், பாறைகளுக்கு நடுவே நசுக்கப்பட்டாலும் விதைகள் முளைத்தே தீரும். அதுபோல் நம்பிக்கையை நமக்குள் விதைத்து வாழ்க்கையில் விருட்சமாவோம்.

படித்ததை பகிர்கிறேன்.


 🙏நன்றி🙏

      வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment