Sunday, March 24, 2024

நில வாசல் படியின் ரகசியம்..


ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியான மூதேவி, ஒரு வீட்டில் வாசம் செய்ய தொடங்கி விட்டால், அந்த வீட்டில் நடப்பவை அனைத்தும் எதிர்மறையாக தான் நடக்கும். மூதேவி என்பவள் நம்முடைய வீட்டில் இரவு நேரத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும். விடிந்தவுடன் வீட்டிற்குள் இருக்க கூடாது. அப்படி நிரந்தரமாக நம்முடைய வீட்டில் மூதேவி தங்கி விட்டால் நிச்சயமாக வீட்டில் இருக்கக் கூடிய பெண்களின் மனதில் மன குழப்பம், தெளிவின்மை ஏற்பட்டு வீட்டில் பல வகையான பிரச்சனைகள் வர தொடங்கி விடும்.

குறிப்பாக பெண்கள் சமைக்கும் போது சமைக்கின்ற பொருட்களை சரியான பக்குவத்தில் சமைக்காமல், தீய விட்டுக் கொண்டே இருந்தாலும், பொங்கி வழிய விட்டுக் கொண்டே இருந்தாலும், அது வீட்டிற்கு தரித்திரம் என்று சொல்வார்கள். இதற்கு காரணம் நம்முடைய கவனக்குறைவு! இந்த அலட்சியம் ஏன் வருகிறது? மனதில் நிம்மதி இல்லை. குழப்பம் நிறைந்த வீடாக இருந்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வீட்டில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.  அதாவது அடிக்கடி பாலை பொங்க விடுவது, அடுப்பில் சாதத்தை வைத்து மறந்துவிடுவது, பருப்பை வைத்து மறந்துவிடுவது, இப்படியாக கவனக் குறைவின் மூலம், ஏற்படக்கூடிய கருகிய வாடையும் மூதேவி வீட்டில் கூடி இருப்பதற்கு ஒரு அறிகுறிதான்.

சரி, இதனை சரி செய்ய என்ன செய்வது? மூதேவிக்கு சிறிதும் விருப்பம் இல்லாத இந்த தூபத்தை உங்களுடைய வீட்டில் வாரம் இரண்டு முறையேனும் போடலாம். சாம்பிராணியோடு கலந்து குங்குலியம், கொப்பரை தேங்காய் துருவல், வெண்கடுகு, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து தூபம் போட்டாலே போதும் வீட்டில் மூதேவி வாசம் செய்வது முற்றிலும் அகற்றப்படும்.

இதோடு சேர்த்து வீட்டில் அடுப்பில் வைத்த பால், சாதம், பருப்பு, இப்படிப்பட்ட உணவுப் பொருட்கள் கருகி வாடை அடித்தாலும், அந்த இடத்தில் மூன்று பச்சரிசியை வைத்து, ஒரு சொட்டு தீர்த்தத்தை விட்டு, அன்னலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வது, எந்த தோஷத்தையும் நம் வீட்டில் உண்டாகாமல் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதோடு சேர்த்து உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம் கனியை இரண்டாக வெட்டி, வாசலில் இரண்டு பக்கம் வைத்தாலும் மூதேவி வீட்டிற்குள் நுழைய மாட்டாள் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி இல்லை என்றால் பச்சை எலுமிச்சம்பழத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மஞ்சள் நிற எலுமிச்சைபழம் அல்ல. கூடவே, மூன்று பச்சை நிற பச்சை மிளகாய்களை எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழம் அதன் மேலே மூன்று பச்சை மிளகாய்களை நூலில் கோர்த்து அப்படியே நில வாசப்படியில் கட்டிவிட வேண்டும்.

இப்படி செய்தால் நிச்சயமாக வீட்டு வாசலை தாண்டி மூதேவி வீட்டுக்குள் நுழைவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த பச்சை நிற எலுமிச்சம் பழத்தையும், பச்சை மிளகாயையும் மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு சீக்கிரமே விடிவுகாலம் பிறக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுடைய மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெரும். சந்தோஷம் நிலைத்து இருக்கும்.


நம்ம வீட்டு நில வாசப்படியில் தான் நம்முடைய குலதெய்வமும் மகாலட்சுமியும் நல்ல தேவதைகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இருப்பினும் நாம் செய்யக்கூடிய சில தவறுகளின் காரணமாக அந்த இடத்தில் நல்ல தேவதைகள் வாசம் செய்ய முடியாமல் போய்விடுகின்றது. நம்மில் நிறைய பேர் வீட்டில் நடக்கக்கூடிய அந்த தவறு என்ன. அதை எப்படி திருத்திக் கொள்ளலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் வீடுகளில் வாசல் கதவை திறந்து வைத்திருப்பார்கள். நிறைய பேர் வீடுகளில் அந்த கதவு மூடியே இருக்கும். பொதுவாகவே திறந்த வாசல் கதவு காற்றின் தடாலென அடிக்கக் கூடாது. கோபம் வந்தாலும் வாசல் கதவை டமால் என்று சாத்த கூடாது. இது வீட்டிற்கு தரித்திரத்தை தேடித்தரும். 

கதவு அதிரும்படி சாத்தப்பட்டால், அந்த நில வாசப்படியில் இருக்கக்கூடிய நல்ல தேவைகள் அந்த இடத்தில் வாசம் செய்ய மாட்டார்கள். எங்க வீட்ல வாசல் கதவை நாங்க தெய்வமாக மதிக்கிறோம். ஆனாலும் கஷ்டம் இருக்கு. என்ன தவறாக இருக்கும்? 

வாசல் கதவு சிலபேரது வீட்டில் லேசாக ஆடிக்கொண்டு இருக்கும். முடிந்தவரை வாசல் கதவைத் திறந்து வைக்கும் போது, காற்றில் ஆடாமல் இருக்க, டோர் லாக் போட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு நாற்காலியையோ அல்லது வேறு ஏதாவது பொருட்களையோ அந்த வாசல் கதவு ஆடாத படி, கதவைத் திறந்து வைக்க வேண்டும். (புரிகிறதா! வாசல் கதவு காற்றில் அடிக்காது. ஆனால் நின்றபடியே லேசாக ஒரு இஞ்ச் அளவு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆடும்.) இப்படி கதவு ஆடிக் கொண்டே இருந்தாலும் தவறு தான். 

சிலபேர் வாசல் கதவு ஆடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நிலவாச படிக்கும் கதவுக்கும் நடுவில் கருங்கல், செங்கல் எல்லாம் கொண்டுவந்து வைப்பார்கள். இப்படி செய்யவே கூடாது. இது அந்த இடத்தில் இருக்கக் கூடிய லக்ஷ்மியை அவமானப்படுத்துவதற்க்கு சமம். வாசல் கதவு, தாழ்பாளும் என்னேரமும் ஆடிக்கொண்டே இருக்கக் கூடிய சூழ்நிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களுடைய குடும்பமும் ஆட்டம் கண்டு விடும் என்பதை மனதில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவோ செலவு செய்கின்றோம். பழுதடைந்த வாசல் கதவை சரி செய்ய எவ்வளவு ஆகப்போகின்றது. வாசல் கதவை எப்போதும் போல புதுசு போல வைத்துக் கொண்டால் உங்க குடும்பமும் எப்பவும் சந்தோஷமா இருக்கும். இது ஜன்னல் கதவுகளுக்கும் பொருந்தும். ஜன்னல் கதவுகளையும் ஆடாமல் காற்றில் படபடவென அடிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. கவனத்தோடு இந்த சின்ன சின்ன விஷயத்தில் மாற்றத்தை கொண்டு வந்து பாருங்க நிச்சயமா பிரச்சினைகள் தீர ஒரு வழி கிடைக்கும்.

No comments:

Post a Comment