Saturday, March 16, 2024

பயணங்களில் கால்கள் வீங்குகிறதா? என்ன செய்யலாம்?


நீண்ட தூர பஸ் பிரயாணங்களின் போது கால்கள் வீங்கிவிடுகின்றன என்று சொன்னீர்கள். எனவே இரண்டு கால்களும் வீங்குகின்றன என்று அர்த்தமாகிறது. ஏனெனில் ஒரு கால் மட்டும் வீங்கினால் அதற்கான காரணங்களும் சிகிச்சையும் வேறுபடும்.

பொதுவாக பிரயாணங்களின் பின்னரான கால்வீக்கம் ஆபத்தானதல்ல. பஸ்சில் பிரயாணம் செல்லும் உங்களை விட அதிக நேரம் விமானப் பயணம் செய்து வருபவர்களின் கால்கள் மேலும் அதிகமாக வீங்குவதுண்டு.

பிரயாணத்தின் போதான இத்தகைய கால் வீக்கங்களுக்கு முக்கிய காரணம் கால்களை தரையில் வைத்தபடி நீண்ட நேரம் ஒரே இடத்தில் செயலற்று உட்கார்ந்து இருப்பதுதான்.

இவ்வாறு இருக்கும்போது கால்களுக்கு செல்லும் குருதியில் ஒரு பகுதி மேலே செல்லாமல் நாளங்களில் தேங்கி நிற்கும். இதனால் குருதியில் உள்ள நீரின் ஒரு பகுதி நாளத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள திசுக்களுக்குள் ஊடுருவும். இதுவே கால் வீக்கத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகும்.

பொதுவாக கணுக்காலை அண்டிய பகுதிகளில் இது வெளிப்படையகத் தெரியும். ஆனால் இது நீண்ட பிரயாணம் செய்யும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மையே.

இரு கால்களும் வீங்குவதற்கு ஒருவர் உட்கொள்ளும் சில மாத்திரைகளும் காரணமாகலாம்.

நீங்கள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை உபயோகிக்கிறீர்களா. அவ்வாறு உபயோகிக்கவர்களுக்கு கால் வீக்கம் வருவதற்கான சாத்தியங்கள். உண்டு. அதே போல உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் நிபிடிப்பின், அமைலோடிபின் (Nifedepine, Amlodepine) போன்ற மாத்திரைகளுக்கும் கால் வீக்கம் வருவதுண்டு.

புருபன் டைகுளோபெனிக் சோடியம், பைரொக்சிகாம் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளும் கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம். நீரிழிவு நோய்க்கு உபயோகிக்கும் பையோகிளிட்டசோன் மாத்திரைகளும் அவ்வாறு வீக்கத்திற்கு காரணமாகலாம். அதேபோல பிரட்டிசலோன் மாத்திரையும் காரணமாகலாம்.

மாத்திரைகளால் ஏற்படும் கால் வீக்கம் பிரயாணம் பண்ணினால்தான் வரும் என்றில்லை. சாதாரண நேரத்திலும் வரலாம். இருந்தபோதும் சிலருக்கு நீண்ட நேரம் பிரயாணம் செய்யும் போதுதூன் முதலில் வெளிப்படுவதுண்டு.

மருந்துகள்தான் உங்கள் கால் வீக்கத்திற்கு காரணமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து வேறு மருந்துகளை மாற்ற முடியுமா என்பதை தீர்மானியுங்கள். நீங்காளாக நிறுத்த வேண்டாம்.

சரி பிரயாணம் போதான இந்து கால் வீக்கம் ஏற்படாமல் தடுக்க நீங்கள் என்ன பாதுகாப்பு எடுக்க முடியும்.

ஒரேயடியாக உட்கார்ந்திருப்பதை தவிர்த்து ஓரிரு மணி ஒரு தடவை எழுந்து சிறிது தூரம் நடந்துவிட்டு மீண்டும் உட்காருங்கள். இது ஆகாய விமானத்தில் சாத்தியம் ஆனால் மக்கள் நிறைந்த பஸ்சில் முடியாத காரியம்

அவ்வாறெனில் நீங்கள் உட்கார்ந்தபடியே உங்கள் முழங்கால்களையும் கணுக்கால்களையும் சற்று மடித்து நீட்டி பயிற்சி கொடுத்தால் இரத்தம் தேங்கி நிற்காது. கால்களுக்கான குருதி சுற்றோட்டம் சீரடையும்.

சாக்கைத் தூக்கிப் போட்டது போல ஆசனத்தில் ஒரே மாதிரி உட்கார்ந்திருக்காது உங்கள் உடல் நிலையை இடையிடையே மாற்றி உட்காருங்கள்.

காலுக்குமேல் கால் போட்டுக் கொண்டிருப்பதை பிரயாணத்தின் போது தவிருங்கள்.

இறுக்கமான ஆடைகளை அணிவதையும் நீண்ட பிரயாணத்தின் போது தவிருங்கள்.

கால் வீக்கத்துடன் வலி இருந்தால் அல்லது ஒரு கால் மட்டும் வீங்குகிறது எனில் மருத்துவ ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும்.

தண்ணீர்:

திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும் தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

போதியளவு தண்ணீர் குடிக்க தவறினால், உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும்.

ஐஸ் பேக், பேண்டேஜ்:

காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.

கால் உயர்த்தி வைத்தல்:

உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது.

சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.

மது அருந்தக் கூடாது:

மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

கல்லுப்பு: 

வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும். 

எலுமிச்சை ஜூஸ்:

உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம். மக்னீசியம்: உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.


🎈🧸🎈

No comments:

Post a Comment